எதையுமே யோசிக்காத எடப்பாடி பழனிச்சாமி! ஸ்டாலின் சாடல்!

Photo of author

By Sakthi

கொரோனா வின் இரண்டாவது அளவு வரும் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கின்ற நேரத்தில் நவம்பர் மாதம் 16ம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருப்பது கண்டனத்திற்கு உரியது என்று ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர கோலத்தில் அறிவித்து இருப்பது மாணவ மாணவியரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக இருக்கின்றது என்று தெரிவித்திருக்கிறார் மு க ஸ்டாலின்.

மாணவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்ய வேண்டும், விடுதி மாணவர்களுக்கான உணவு மற்றும் தங்கும் வசதிகளை செய்து கொடுப்பது எப்படி என்ற அச்சத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கவலையில் இருப்பதை காண முடிகிறது.

அதோடு கொரோனாவின் இரண்டாவது அலை வீசக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனமே எச்சரித்து இருக்கின்ற நிலையில், நவம்பர் தமிழகத்தில் மட்டும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க வேண்டுமா என்ற கேள்வியினை அனைத்து தரப்பினரும் எழுப்பி இருக்கிறார்கள் என்று முதல்வர் உணராமல் இருப்பது கண்டனத்திற்கு உரியது என்று தெரிவித்திருக்கிறார்.

நிதானத்துடன் எந்த ஒரு முடிவையும் மேற்கொள்ளாமல், நன்றாக யோசித்து முடிவெடுக்காமல் மக்களைப் பற்றி கவலை இல்லாமல் இவ்வாறு ஒரு முடிவு எடுத்து இருக்கின்றார் எடப்பாடி பழனிச்சாமி.

பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உள்ள சங்கடத்தை பற்றி யோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கின்றார்.

கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், போன்ற அனைத்து தரப்பினருமே நவம்பருக்கு பதிலாக பொங்கல் விடுமுறை முடிந்து 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் அப்போது இருக்கும் சூழ்நிலையை பொறுத்து முடிவெடுக்க வேண்டும் என்று ஒரு கருத்தை முன்வைத்து இருக்கிறார்கள். எனவே இதனை பரிசீலனை செய்து ஒரு நல்ல முடிவாக எடுக்க வேண்டும் என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார்.