மருத்துவர்களுக்கு குட்நீயூஸ் சொன்ன ஸ்டாலின்!

Photo of author

By Sakthi

நோய்த் தொற்று காரணமாக நாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதோடு உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் இந்த தொற்று நோயை கட்டுப்படுத்துவது மிக சிரமமாக இருக்கிறது.

இதற்கு காரணம் உருமாறிய நோய்த்தொற்று மற்றும் மக்களின் அலட்சியம் தான் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.அத்துடன் இந்தியாவில் இதே நிலை நீடிக்குமானால் பிற்காலத்தில் பாதிப்பு மேலும் அதிகமாகி அதோடு அது உலக நாடுகள் அனைத்தையும் சிக்கலுக்கு உள்ளாகும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.இந்த சூழ்நிலையில், நோய் தொற்று சிகிச்சை பணியில் ஈடுபட்டு உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

அதன்படி இந்த நோய் தொற்று சிகிச்சை பணியில் ஈடுபட்டு தொற்றிற்கு ஆளாகி இறந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அதேபோல இந்த நோய்த்தொற்று சிகிச்சையில் பணிபுரிந்த மருத்துவர்களுக்கு 30000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார். அதோடு இதில் பணியாற்றிய செவிலியர்களுக்கு 20,000 ரூபாய் ஊக்கதொகை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.

அதேபோல இந்தத் தொற்றின் இரண்டாவது அலையில் பணிபுரிந்த மற்ற மருத்துவ பணியாளர்களுக்கு 15000 க்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அதோடு மேற்படிப்பு மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு 20 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கபடும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.