திமுக தொண்டர்களுக்கு – அலட்சியம் காட்ட வேண்டாம் என்று ஸ்டாலின் வலியுறுத்தல்!

Photo of author

By Parthipan K

விரைவில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தொண்டர்களை அழைத்து கட்சியின் தேர்தல் கொள்கைகளைப் பற்றியும், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றியும் ஆலோசித்து உள்ளார் மு.க.ஸ்டாலின்.

இன்று தெற்கு மண்டல பகுதியை சேர்ந்த தொண்டர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், அவர்களிடம் வருகின்ற தேர்தலில் நாம் வெற்றி பெற்று விடுவோம் என்ற உறுதியில் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார். 

கடந்த சில ஆண்டுகளாக நாம் ஆட்சியில் இல்லை என்றாலும் மக்களுக்கு நம்மால் இயன்ற நற்பணிகளை, நம் கட்சி சார்பாக தொடர்ந்து செய்து வருவது அனைவரும் அறிந்ததே என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதனால் மக்களின் வாக்குகளை ஒன்றுகூட விடுபடாமல் நாம் பெற வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.