தமிழகத்தில் கால்பதித்தார் ஆர் என் ரவி! தமிழக அரசியலில் இனி என்ன நடக்கும்!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி காலூன்ற வேண்டும் என்று பல காலமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால் இதுவரையில் அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இருந்தாலும் சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக நான்கு சட்டசபை உறுப்பினர்களுடன் சட்டசபை நுழைந்திருக்கிறது.

பாஜகவின் தேசியத் தலைமை தமிழகத்தில் தன்னுடைய ஆளுமையை செலுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக, பலவாறு முயற்சி செய்து வந்தது இருந்தாலும் அந்த முயற்சியில் அந்த கட்சி வெற்றி பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும், முன்பெல்லாம் தமிழகத்தின் பாஜக தலைவர் என்று நியமிக்கப்படுபவர் ஏதோ பெயருக்காக அந்த பதவியை தன் பெயருக்குப் பின்னால் வைத்துக் கொண்டே இருப்பார். அப்படி இருந்த சூழ்நிலையில், சமீபகாலமாக பாஜக தமிழகத்தில் நிகழ்த்தும் மாற்றங்கள் மிகவும் அதிரடியாக இருந்தது.

பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் ஒரு பெண் என்ற காரணத்தாலும், அதோடு அவர் தலைவராக நியமிக்கப்பட்டார். பெண்களின் வாக்குகளை இருப்பதற்கான வாய்ப்பிருப்பதாகவும் கருதிய பாஜகவின் மேலிடம் அவரை தலைவராக நியமனம் செய்தது சுமார் இரண்டு முறை அவர் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதனை அடுத்து அவர் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதைத்தொடர்ந்து தமிழக பாஜகவின் தலைவர் பதவி காலியானது. அந்த பதவிக்கு முருகன் நியமிக்கப்பட்டார் ஆனால் சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் அவருக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதனால் அவர் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார் இதனைத் தொடர்ந்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை தலைவராக நியமிக்கப்பட்டார்.

இப்படி பல அதிரடி மாற்றங்களை செய்து பார்த்த பாஜக தற்போது புதுவித ஆயுதத்தை கையிலெடுத்து இருக்கிறது. அதாவது தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக உளவுத்துறை மற்றும் காவல் துறையில் மிகுந்த அனுபவம் உடையவரான ரவீந்திர நாராயணன் ரவி நியமனம் செய்யப்பட்டார்.

இதற்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் ஏனென்றால் உளவுத்துறையில் அனுபவம் வாய்ந்த ஒருவரை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருப்பது நிச்சயமாக தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்காக செய்யும் சித்து வேலை என்று ஒரு சிலர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு இருக்கின்ற ரவீந்தர நாராயணன் ரவி அவர்கள் நேற்று இரவு சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். அவரை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய அமைச்சரவை சகாக்களுடன் நேரில் சென்று வரவேற்றார்.

தமிழகத்திற்குள் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னரே தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி நாளைய தினம் தமிழகத்தின் 25வது ஆளுநராக பதவி ஏற்க இருக்கிறார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.