Rajinikanth: ரஜினிகாந்த் முதலில் அரசியலுக்கு வருவதாக கூறிவிட்டு அப்படியே பின் வாங்கினார். அதனையடுத்து ஒருபொழுதும் அரசியல் ரீதியாக எந்த கேள்வி கேட்டாலும் பதில் அளிப்பதில்லை. அது குறித்து பேசுவதும் இல்லை, ஆனால் இவர் பாஜகவின் வலது கைகளில் ஒன்று என்பது அனைவரும் அறிந்தது தான். அந்த வகையில் மோடி ஒவ்வொரு முறையும் புதிய அறிவிப்புகளை வெளியிடும்போது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதையே வழக்கமாக வைத்துள்ளார். தற்சமயம் இரண்டு வாரங்களுக்கு முன் தமிழக கடலோர மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதாவது தமிழ்நாட்டின் பாதுகாப்பு தன்மையை கெடுக்கும் வகையில் தீவிரவாதிகள் கடல் வழியாக தமிழ்நாட்டிற்குள் ஊடுருவ அதிக வாய்ப்புள்ளது. அப்படி சந்தேகிக்கும் வகையில் ஏதேனும் நபர்கள் தென்பட்டால் கட்டாயம் அவர்கள் குறித்து புகாரை காவல் நிலையத்தில் அளிக்க வேண்டும். மேற்கொண்டு இது ரீதியாக சிஎஸ்எப் வீரர்கள் 100 பேர் கிட்டத்தட்ட 7000 கிலோமீட்டர் தூரம் மேற்குவங்கத்திலிருந்து கன்னியாகுமாரி வரை சைக்கிள் பயணம் மேற்கொள்வர். அப்படி தங்களின் பாதுகாப்பை பலப்படுத்த வருபவர்களை வரவேற்று புத்துணர்ச்சி அளிக்க அவர்களுடன் சிறிது தூரம் செல்லலாம் என கூறியுள்ளார்.
இவ்வாறு ரஜினிகாந்த் விழிப்புணர்வு ஏற்படுத்தியது குறித்து தமிழக மேலிடத்திற்கு திடீர் சந்தேகம் எழுந்துள்ளது. ரஜினி கூறியதை பாதுகாப்புத்துறை அமைச்சகம் அல்லவா தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் இவர் ஏன் திடீரென்று இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்?? இதன் பின்னணியில் என்ன உள்ளது?? என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் மத்தியில் பாஜகவும், மாநிலத்தில் அதற்கு எதிரான ஆட்சி அமையும் போது மாநில அரசை அச்சுறுத்தும் வகையில் இதுபோல செய்திகளை மத்திய அரசு சித்தரித்து வெளியிடுவது வழக்கம். ஆனால் இம்முறை ரஜினியையே களத்தில் இறக்கியுள்ளார்கள் என்றால் பெரிய நோக்கம் இருக்க வேண்டும். அதனால் தமிழக அரசு இது ரீதியாக குழு அமைத்து விசாரணை செய்து வருகிறது.