State

அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் தி மு க – ஸ்டாலின் பரபரப்பு தகவல்!

மருத்துவ படிப்பு படிக்க விரும்பும் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயம். தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்தில் உள் ஒதுக்கீடு கோரிய அதிமுகவுக்கு ஆதரவாக திமுக இணைய உள்ளதாக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார் அதுமட்டுமன்றி உள்ஒதுக்கீடு வழங்கும் படி ஆளுநருக்கு கடிதம் எழுதி இருப்பதை  குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி மாநில உரிமைகளை மீட்டெடுப்பதற்காக என்ன வகையான போராட்டம் நடத்த வேண்டும் என்பது குறித்த ஆலோசனை அனைத்து கட்சி கூட்டத்தை திரட்டி எந்த நாளில் போராட்டம் நடத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் அதிமுக மேற்கூறிய அனைத்தையும் உடனடியாக  செய்யல் படுத்த கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விஷயத்தில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Comment