திமுக பொது செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்வது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை!

0
183

திமுக பொது செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்வது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை!

திமுக பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வேட்புமனுக்களை இன்று முதல் திமுக தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று
அறிக்கை ஒன்றினை திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது

திமுக பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வேட்பு மனுக்களை இன்று முதல் தலைமை கழகத்தில் ஆயிரம் ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றும்,பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.மேலும் இந்த வேட்புமனுக்கள் செப்டம்பர் 4 ஆம் தேதி பரிசீலனை செய்யப்படும் என்றும்,செப்டம்பர் 5 தேதி பிற்பகல் 1 மணிக்குள் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும்,செப்டம்பர் 5ஆம் தேதி மாலை 4 மணி அளவில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Previous article“பாஜகவில் ரவுடிகளை சேர்ப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்” ஒற்றுமை மக்கள் சார்பில் கண்டன அறிக்கை
Next articleகொரோனா பரவல்: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1045 பேர் பலி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here