கொரோனா பரவல்: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1045 பேர் பலி!

0
193

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 78,357 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,69,524 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,045 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 66,333 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 29,01,909 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்றைய தேதியில் 8,01,282 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 10,12,367 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் இதுவரை 4,43,37,201 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Previous articleதிமுக பொது செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்வது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை!
Next articleமிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here