சொகுசு கப்பலில் நடைபெற்ற நட்சத்திர விருந்து! பிரபல நடிகரின் மகன் கைது!

Photo of author

By Hasini

சொகுசு கப்பலில் நடைபெற்ற நட்சத்திர விருந்து! பிரபல நடிகரின் மகன் கைது!

Hasini

Star party on a luxury cruise ship! Famous actor's son arrested

சொகுசு கப்பலில் நடைபெற்ற நட்சத்திர விருந்து! பிரபல நடிகரின் மகன் கைது!

தற்போது வளர்ந்து வரும் தலைமுறையினரிடையே போதை பொருள் கலாசாரம் அதிக அளவு பயன்பாட்டில் உள்ளது. அதிலும் திரையினர் என்றால் சொல்லவே வேண்டாம். அந்த அளவு போதைப் பொருட்கள் எங்கிருந்து தான் கிடைக்கிறதோ? தெரியவில்லை. போலீசார் எவ்வளவு சோதனைகள் செய்தாலும், எப்படியோ போதை பொருள் கும்பல் அதனை ரகசியமாக விற்பனை செய்து தான் வருகின்றனர்.

மும்பையிலிருந்து கோவாவிற்கு ஆடம்பர சொகுசு கப்பல் ஒன்று இயக்கப்பட்டது. இந்த கப்பலில் போதை பொருள் பார்ட்டி நடப்பதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனை அடுத்து அந்த பிரிவு போலீசார் தலைமை அதிகாரிகளின் ஆலோசனையில் மாறுவேடத்தில் அந்த கப்பலில் பயணம் செய்தனர்.

கப்பல் மும்பையிலிருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் எல்லாம் அந்த நட்சத்திர பார்ட்டி ஆரம்பமானது. அதில் பங்கேற்ற அனைவரும் ஹசிஷ், எம்டி, கோகைன் அதிக அளவு பயன்படுத்தினர். இதையடுத்து அதிகாரிகள் அங்கே திடீரென்று ரெய்டு நடத்தினர். எனவே அந்த விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள் மேலும் வைத்திருந்தவர்கள் என மொத்தம் 13 பேரை பிடித்துள்ளனர்.

அதில் முக்கியமாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானும் உள்ளான். பிடிபட்ட அனைவரிடமும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் ஷாருக்கான் மகனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஆர்யன் கான் உட்பட 3 பேரை மருத்துவ பரிசோதனைக்கும் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.