எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்த மகிழ்ச்சியான செய்தி! உடனே இதை செய்யுங்கள்!

0
130

பாரத ஸ்டேட் பேங்கின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி வெளியாகியிருக்கிறது, வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டி அதிகரித்திருப்பதாக தற்சமயம் ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.

வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.90 சதவீதமாக அறிவித்ததை தொடர்ந்து எஸ்பிஐ வங்கி இந்த புதிய முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.

நிலையான வைப்பு தொகை என்று சொல்லக்கூடிய பிக்சட் டெபாசிட் நடுத்தர மக்களின் நம்பகமான சேமிப்புகளில் ஒன்றாக இருக்கிறது.

காரணம், பணத்திற்கு முழு பாதுகாப்பு என்பதில் ஆரம்பித்து குறுகிய கால சேமிப்பு மற்றும் வட்டித் தொகை உள்ளிட்ட இதை இரண்டுமே கிடைப்பதால் தயக்கமின்றி பலரும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள்.

வெறும் வங்கி போஸ்ட் ஆபீஸ் மட்டுமல்லாமல் நிதி நிறுவனங்களிலும் அவர்கள் முதலீடு செய்ய தவறுவதில்லை. வங்கிகளை விடவும் சில நிதி நிறுவனங்களை எடுத்துக் கொண்டால், அதிக வட்டி வழங்குவதால் பொதுமக்களின் பார்வை நிதி நிறுவனங்களின் பக்கம் திரும்பி விடுகிறது.

அதேநேரம் உங்களுடைய பணத்திற்கான பாதுகாப்பை 1க்கு 2 முறை உறுதியாக இருக்கிறதா? என்பதை கவனிக்கத் தவறிவிடாதீர்கள்.

அண்மையில் தனியார் வங்கிகள் அடுத்தடுத்து ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு வட்டியை அதிகரித்தனர். அந்த விதத்தில் தற்சமயம் எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தியை தெரிவித்திருக்கிறது.

இதுதொடர்பாக உரையாற்றிய எஸ்பிஐ தலைவர் தினேஷ்குமார் காரா புதிய ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை பொருத்தவரையில் அவை புதிய வட்டி விகிதங்களின் அடிப்படையில் இருக்கும் சில முதிர்வுகளுக்கு ஏற்கனவே வட்டிவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 50 சதவீத அடிப்படை புள்ளிகள் அதிகரித்தது இதன் காரணமாக, கடன் பெற்றவர்களின் இஎம்ஐ அதாவது மாதத்தவணை தொகை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், எஸ்பிஐ வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டி அதிகரிக்கவுள்ளதாக அறிவித்திருக்கும் இந்த தகவல் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் 12 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரையிலான fd திட்டங்களுக்கு தற்போது 5.10 சதவீத வட்டி விகிதத்தை பெறுகிறார்கள்.

3 முதல்5 வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்திற்கு புதிய f&b திறக்கப்பட்டால் வட்டி விகிதம் 5.45 சதவீதமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

Previous articleசென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்ற விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்காக அந்த அரிய வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!
Next articleதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு! மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்!