நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் மாநில தேர்தல் ஆணையம்!

0
137

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்காளர் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள் உடன் மாநில தேர்தல் ஆணையர் பழனி குமார் காணொளி மூலமாக ஆலோசனை நடத்தியிருக்கிறார்.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் எதிர்வரும் 9ஆம் தேதி வெளியிடப்படும் என்று அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல் நகல் வழங்குவது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்தல், மண்டல அலுவலர்கள் வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமனம், வாக்குச்சாவடிகளில் செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதி, மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு சாய்தள மேடை அமைப்பது முதியவர்களுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்தல், உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல், அதேபோல வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவை நேரலையாக கண்காணித்தல், நுண் மேற்பார்வையாளர்களை நியமனம் செய்வது, எல்லா வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது, வாக்கு எண்ணும் மையங்களை இறுதி செய்வதில் வாக்குப்பதிவுக்கு தேவைப்படும் பொருட்களின் இருப்பை உறுதி செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

கூட்டத்தில் ஆணைய செயலாளர் சுந்தரவள்ளி, பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ், நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா, உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றார்கள். முன்னதாக புதிதாக உருவாக்கப்பட்டு இருக்கக்கூடிய மற்றும் மறுவரையறை செய்யப்பட்டிருக்கிற நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு வார்டு எண்ணிக்கையை நிர்ணயம் செய்வது தொடர்பாக வார்டு வரையறை கூட்டம் நடைபெற்ற,து இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleமழை வெள்ள பாதிப்பை பார்வையிடுவதற்காக இன்று தூத்துக்குடி வரும் முதலமைச்சர்!
Next articleநகர்புற உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்துக! உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு!