மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!

0
135

மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கிராமப் புறங்கள் மற்றும் தொலைதூர மலைப்பாங்கான பகுதிகளில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு, தமிழக அரசு சிறப்பு சலுகையாக மருத்துவ மேற்படிப்புகளில் சேர்க்கைக்கான இட ஒதுக்கீட்டை வழங்கி வருகிறது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும், மாநில அரசுகள் இட ஒதுக்கீடு தருவதை தடுக்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என்றும் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், இட ஒதுக்கீடு அளிக்கும் விதிமுறைகள் இந்திய மருத்துவ கவுன்சில், சட்டத்தை மீறுவதாக உள்ளதாகவும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் ஏற்கனவே இட ஒதுக்கீடு இருந்தால் இந்த தீர்ப்பு அதனை பாதிக்காது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Previous articleகாதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய காவல்துறை அதிகாரி!
Next articleதனிஒருவன்2 படத்தின் வில்லன் கதாபாத்திரம் யாருக்கு? குழப்பத்தில் படக்குழுவினர்