விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்கும் ரூ 8000!! உடனே பெற எப்படி விண்ணப்பிப்பது?

Photo of author

By Divya

விவசாயிகளுக்கு மாநில அரசு வழங்கும் ரூ 8000!! உடனே பெற எப்படி விண்ணப்பிப்பது?

கடந்த 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.இந்த திட்டத்தில் பயிர் செய்யும் உழவர்கள் மட்டுமல்ல
தோட்டக்கலை வைத்திருப்பவர்கள்,பட்டுப்பூச்சி வளர்ப்பு, கோழி வளர்ப்பு,மரம் வளர்ப்பு,பால் பண்ணை,கால்நடை வளர்ப்பு,மீன் வளர்ப்பு செய்பவர்களும் பயன்பெற முடியும்.

இத்திட்டத்தின் மூலம் திருமண உதவித்தொகை,முதியோர் நிதி உதவி,இறப்பு உதவி,கல்வி உதவி உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது.உழவர் அட்டை வைத்திருக்கும் ஆண் தன்னுடைய திருமணத்திற்கு ரூ.8 ஆயிரம் மற்றும் பெண் ரூ.10 ஆயிரம் வரை உதவித்தொகை பெற முடியும்.

60 வயதை கடந்த நிலமற்ற மூத்த குடிமக்கள் உழவர் அட்டை மூலம் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற முடியும்.உழவர் அட்டை வைத்திருப்பவர் எதிர்பாரா விதமாக இறந்துவிட்டால் அவரின் இறுதி சடங்கிற்கு ரூ.2,500 பண உதவி வழங்கப்படுகிறது.அதேபோல் உழவர் அட்டை உறுப்பினர் இறந்தால் அவரது குடும்பத்திற்கு ரூ.20 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும்.

உழவர் பாதுகாப்பு திட்டம்

*18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் இணையலாம்.

*சிறு மற்றும் குறு விவசாயிகள் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இணையலாம்.

*கூலி வேலை செய்யும் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

உழவர் பாதுகாப்பு அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

முதலில் sevai என்ற இணைய பக்கத்திற்கு செல்லவும்.பிறகு நீங்கள் Citizen login என்பதை க்ளிக் செய்யவும்.அதன் பின்னர் New User? SignUp here என்பதை க்ளிக் செய்து User I’d உருவாக்கவும்.

பின்னர் கேட்கப்படும் அனைத்தையும் நிரப்பி Captcha எண்ணை பதிவிட்டு sign in செய்யவும்.அடுத்து உங்கள் செய்த மொபைல் எண்ணிற்கு வரும் OTP எண்ணை என்டர் செய்யவும்.அதன் பின்னர் services என்ற மெனுவில் உள்ள Revenue Department-ஐ தேர்வு செய்யவும்.

பிறகு Small Marginal Farmer Certificate என்பதை தேர்வு செய்து can Number-ஐ பதிவு செய்யவும்.அதன் பின்னர் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ,சிட்டா,சுய விருப்பு கடிதத்தை அதில் பதிவேற்றவும்.

பின்னர் உழவர் அட்டை பெற ரூ.60 கட்டணம் செலுத்தி ஒப்புகை சீட்டை பெற்றுக் கொள்ளவும்.அதில் உள்ள எண்ணை வைத்து உழவர் அட்டையை பெற்றுக் கொள்ளவும்.