அகில இந்திய பட்டியல் இன இளைஞர் பேரவை முதல்வருக்கு எழுதிய கடிதம்- திகைப்பில் பாமக மற்றும் இதர கட்சிகள்.

அகில இந்திய பட்டியல் இன இளைஞர் பேரவை முதல்வருக்கு எழுதிய கடிதம்- திகைப்பில் பாமக மற்றும் இதர கட்சிகள்.

பட்டியல் இன மக்களுக்கு எதிரான கட்சி பாமக என்று பொதுவாக பேசிவரும் நிலையில் ,அகில இந்திய பட்டியல் இன பேரவை சார்பாக பாமகவின் இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு ஆதரவாக முதல்வருக்கு கடிதம் எழுதியது அரசியல் வட்டாரங்களில் வியப்பாக பேசப்பட்டு வருகிறது.

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு என்ற 40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்ற சொல்லி டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் தற்போது வரை 5 கட்டங்களாக பாமகவும் மற்றும் வன்னியர் அமைப்புகளும் சேர்ந்து போராடிக்கொண்டு வருகிறது.

இந்த போராட்டத்திற்கு ஏற்கனவே நாடார் சங்கங்கள் அருந்ததியர் அமைப்புகள் ஆதரவு அளித்து வந்தன. அதேபோல் புதிய தமிழகம் கட்சியும் நாம் தமிழர் கட்சியும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தை ஆதரித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அகில இந்திய பட்டியல் இன இளைஞர் பேரவை முதல்வருக்கு எழுதிய கடிதம்- திகைப்பில் பாமக மற்றும் இதர கட்சிகள்.

தற்போது பாமகவின் ஆறாவது கட்டம் போராட்டம் நேற்று நடைபெற்றது. அதில் வன்னியர்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் உள் இட ஒதுக்கீடு கேட்டு தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தை நடத்தினார்கள் .இந்த போராட்டத்தில் எப்பொழுதும் இல்லாத அளவு அதிகமான மக்கள் கலந்து கொண்டார்கள் .மேலும் இந்தப் போராட்டத்தில் கட்சி பாகுபாடு இன்றி திமுக அதிமுக தேமுதிக கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் வியப்படையச் செய்தது.

அதுமட்டுமல்லாமல் அகில இந்திய பட்டியல் இன எழுச்சி பேரவையின் மாநில துணைத் தலைவர் வீ. மாரியப்பன் தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது

 

அகில இந்திய பட்டியல் இன இளைஞர் பேரவை முதல்வருக்கு எழுதிய கடிதம்- திகைப்பில் பாமக மற்றும் இதர கட்சிகள்.

அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு மருத்துவர் ராமதாசின் அழுத்தத்தின் பேரில் தான் கிடைத்தது, இப்போது வன்னியர்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு கோரி அறவழியில் டாக்டர் . இராமதாஸ் அவர்கள் போராடி வருவது நியமாகவும் , நேர்மையாகவும் தெரியவருகிறது . வன்னியர்களின் அதிகம்பேர் வருமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கிறார்கள் இது மறுக்கமுடியாத உண்மை . வன்னியர்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடை வழங்கி உதவீர்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையோடு இந்த கோரிக்கையை தங்களின் மேலான பார்வைக்கு பணிவுடன் சமர்பிக்கிறேன் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் பல்வேறு அமைப்புகளும் ஆதரவு அளித்து வரும் நிலையில், தமிழக அரசு வன்னியர்களின் கோரிக்கையை கண்டுக்காமல் நிராகரித்து வருவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளதாக பாமக தரப்பில் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாது உயிர்த்தியாகம் செய்து இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்த வன்னியர் சமுதாயத்துக்கு 20% சதவீதத்தில் கிடைக்கும் பிரதிநிதித்துவம் 3.5% மட்டும் தான்,
எதுவுமே செய்யாத 4 சாதிகளுக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவம் 8 %
இது எவ்வளவு பெரிய அநியாயம்.அதனால் தான் வன்னியர்களுக்கு என தனி இட ஒதுக்கீடு தருமாறு கேட்டு போராடி வருகிறோம் என்கிறார்கள் பாமகவினர்.

பாமகவிற்கு உள் இட ஒதுக்கீடு கொடுத்து கூட்டணியில் தக்க வைத்துக் கொண்டால் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக அரசு வெற்றி பெறுவது உறுதி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

தேமுதிகவை கழட்டி விட நினைக்கும் அதிமுக என்ன செய்யலாம்! இன்று முக்கிய முடிவு எடுக்கும் விஜயகாந்த்!

தேமுதிகவை கழட்டி விட நினைக்கும் அதிமுக என்ன செய்யலாம்! இன்று முக்கிய முடிவு எடுக்கும் விஜயகாந்த்!

அதிமுக கூட்டணியில் தற்போது இருந்து வரும் தேமுதிக எதிர்வரும் தேர்தலை அதிமுக கூட்டணியில் இருந்து சந்திக்கலாமா, அல்லது தனித்து சந்திக்கலாமா என்பது தொடர்பாக இன்று முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக காத்துக்கொண்டிருக்கிறது ஆனாலும் ஆளும் கட்சியான அதிமுக அதனைப் பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சசிகலாவை ஆதரிக்கும் வகையிலும், எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்யும் வகையிலும் பேசியிருக்கிறார். அவருடைய அந்த பேச்சு ஆளும் … Read more

சுயநலம் மிக்கவர்கள்! ரஜினி ரசிகர்களை ஆடிட்டர் குருமூர்த்தி!

சுயநலம் மிக்கவர்கள்! ரஜினி ரசிகர்களை ஆடிட்டர் குருமூர்த்தி!

ரஜினி கட்சி தொடங்க வில்லை என்று தெரிவித்த உடனேயே அவருடைய ரசிகர்கள் பலர் அதிமுகவும் திமுகவும் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள். ஊழலை ஒழித்து விட வேண்டும் என்று ரஜினிகாந்த் நினைத்திருந்தார். ஆனால் தற்போது அந்த ஊழல் எங்கிருந்து ஊற்றெடுக்கிறதோ அந்த கட்சியில் போய் அவருடைய ரசிகர்கள் சேர்ந்து இருப்பது ஒரு சிலருக்கு வேண்டும் என்றால் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இதில் ஆச்சரியப்படுவதற்கு காரணம் எதுவும் இல்லை என்று ரஜினி அரசியல் பிரவேசம் தொடர்பாக பத்திரிகையின் ஆசிரியர் … Read more

அதிமுகவும் சசிகலாவும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை! அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!

அதிமுகவும் சசிகலாவும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை! அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!

சசிகலாவின் விடுதலையை தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. சசிகலா தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் எனவும், தற்போது அதிமுகவில் இருக்கும் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருவதால் ஆளுங்கட்சியை சசிகலா கைப்பற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இருந்தாலும் அதற்கு வாய்ப்பே கிடையாது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறார். அவ்வாறு தெரிவித்துக் கொண்டிருக்கும் போதே ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் சசிகலாவை வரவேற்கும் விதமாக சுவரொட்டிகளை ஒட்டி கொண்டு … Read more

சுயநலம் மிக்கவர் நாராயணசாமி! நமச்சிவாயம் குற்றச்சாட்டு!

சுயநலம் மிக்கவர் நாராயணசாமி! நமச்சிவாயம் குற்றச்சாட்டு!

புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி மீது இருந்த கோபம் காரணமாக, புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் சமீபத்தில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்பு புதுச்சேரிக்கு வந்த நமச்சிவாயத்திற்கு அவருடைய ஆதரவாளர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தார்கள். இதனையடுத்து, புதுச்சேரியின் பாஜக அலுவலகத்திற்கு முதல் முறையாக சென்ற நமச்சிவாயத்தை அந்த மாநிலத்தில் பாஜக தலைவர் சாமிநாதன் மற்றும் மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் மற்றும் பாஜக நிர்வாகிகள் வரவேற்றார்கள். இதனை அடுத்து நடந்த பொதுக்கூட்டத்தில், உரையாற்றிய நமச்சிவாயம் தங்களைப் … Read more

கனிமொழியை விமர்சித்த பாஜக நிர்வாகி! கொதித்தெழுந்த குஷ்பு செய்த காரியம்!

கனிமொழியை விமர்சித்த பாஜக நிர்வாகி! கொதித்தெழுந்த குஷ்பு செய்த காரியம்!

நடிகை குஷ்பு பாஜகவின் தன்னை இணைத்துக்கொண்ட பின்னர் பாஜகவினர் சமூக ஊடகங்களில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக கருத்து தெரிவித்து வந்தார்கள். அவர்களை கண்டித்து வருகிறார் நடிகை குஷ்பு. சமீபத்தில் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி நாக்பூர் டவுசரவலாக்களால் தமிழ்நாட்டில் எதிர்காலம் என்னவென்று நிர்ணயிக்க இயலாது என்று விமர்சனம் செய்திருந்தார். இந்த விஷயத்திற்கு பாரதிய ஜனதாவின் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த நிர்மல் குமார் என்பவர் அட முட்டாளே இத்தாலி பார் டான்சர் இந்தியாவின் தலையெழுத்தை முடிவு … Read more

வரவேற்பு குறைந்ததன் எதிரொலி! எழுவது மினி பேருந்துகள் நிறுத்தம்!

வரவேற்பு குறைந்ததன் எதிரொலி! எழுவது மினி பேருந்துகள் நிறுத்தம்!

குறைந்த அளவில் பயணிகள் வரும் காரணத்தால் சென்னையில் இயக்கப்பட்டு வந்த எழுவது மினி பேருந்துகள் நிறுத்தப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்திருக்கிறது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சென்னையில் மினி பேருந்து போக்குவரத்து திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.. மாநகர பஸ்கள் செல்ல இயலாத இடங்களில் இந்த மினி பேருந்துகள் சென்று வந்தன. சென்னையின் பெரிய இடங்களுக்கும் இந்த மினி பேருந்துகள் சென்று வந்தன, ஆட்டோவை விட குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட காரணத்தால் புறநகர் பகுதிகளுக்கும் சென்று … Read more

மு க அழகிரியும் ஜேபி நட்டாவும் சந்திப்பு? ஸ்டாலின் அதிர்ச்சி!

மு க அழகிரியும் ஜேபி நட்டாவும் சந்திப்பு? ஸ்டாலின் அதிர்ச்சி!

தமிழக பாஜகவின் தலைவர் முருகன் மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அந்த சமயத்தில் அவர் தெரிவிக்கும்போது பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா தமிழகம் வரவிருக்கிறார் என்பது தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு ஒரு புதிய உத்வேகத்தை கொடுக்கும். அவருக்கு மதுரையில் ஒரு சிறப்பான வரவேற்பு கொடுக்க இருக்கின்றோம். அவர் மு.க. அழகிரியை சந்திப்பாரா என்று கேள்வி எழுப்பியதற்கு பதில் தெரிவித்த முருகன் ஜெ .பி . நட்டாவின் வருகை எங்களுடைய அமைப்பு குறித்த கூட்டத்தில் பங்கேற்க மட்டுமே இதில் … Read more

விரைவில் தேர்தல்! தமிழக தேர்தல் ஆணையம் விறுவிறு ஏற்பாடு!

விரைவில் தேர்தல்! தமிழக தேர்தல் ஆணையம் விறுவிறு ஏற்பாடு!

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது அதனை தொடர்ந்து 9 2300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டசபை தேர்தல் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கின்ற நிலையில், தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் மிக தீவிரமாக இறங்கி வருகிறார்கள். அதே சமயத்தில் தமிழகத் தேர்தல் ஆணையமும் சட்டசபை தேர்தலுக்கான வேலைகளை மிகத் தீவிரமாக செய்து வருகின்றது. அந்தவிதத்தில், தேர்தலில் … Read more

என்னை விட்டால் உங்களுக்கு வேறு நாதி இல்லை! சீமான் அதிரடி!

என்னை விட்டால் உங்களுக்கு வேறு நாதி இல்லை! சீமான் அதிரடி!

நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னை மண்ணடி தம்பு செட்டி வீதியில் நடந்து வரும் முத்துக்குமாரின் நினைவேந்தல் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று உரை நிகழ்த்தினார். அந்த சமயத்தில் உரையாற்றிய அவர் தமிழர்கள் இன பற்றுடன் இருக்க வேண்டாம், ஆனால் இனவெறியுடன் இருக்கவேண்டும். அடிபணிந்து செல்வது போன்ற பழக்கங்கள் எங்களுடைய பரம்பரையில் சுத்தமாக கிடையாது. இஸ்லாமிய சங்கங்கள் ,இஸ்லாமிய மக்கள் அவர்கள் எதற்காக காகிதம் இல்லத்தை தொடர்பாக பேசுவதற்கு பயம் கொண்டு … Read more