மாநிலங்களுக்கிடையேயான பொதுப் போக்குவரத்து இயக்கப்படுவது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை!

Photo of author

By Pavithra

மாநிலங்களுக்கிடையேயான பொதுப் போக்குவரத்து இயக்கப்படுவது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நோய்த்தடுப்பு பணிகளை குறித்து நேற்று தமிழக முதல்வர் ஆய்வு செய்தார்.பின்னர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் கூறியதாவது,டெல்லி,கர்நாடகா ஆந்திரா,உள்ளிட்ட மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது,மேலும் அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கையின் காரணமாக உயிரிழப்புகளின்,
எண்ணிக்கையும் குறைந்து கொண்டுவருகின்றது.
சராசரியாக,முன்பெல்லாம் நாளொன்றுக்கு.110 முதல் 115 பேர் வரை கொரோனா இறப்பு விகிதம்,வந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கையானது மிகவும் குறைந்துள்ளது,ஏற்கனவே உடலில் பல நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தொற்றுக்கு ஆளாகும் பொழுதுதான் இறப்பு விகிதம் அதிகரித்துவந்தது. தமிழக அரசின் தீவிர நோய்த் தடுப்பு பணியின் காரணமாக தற்போது தமிழ்நாட்டில் கொரோனாத் தொற்றின் எண்ணிக்கையையும் இறப்பு விகிதமும் குறைந்து கொண்டே வருகிறது என்று அவர் கூறினார்.

மேலும் இதைத் தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர் அவர்கள் கொரோனா பாதிப்பு குறைந்த உடன் மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து இயக்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.