பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு மாநிலங்கள் தான் காரணம்! சுட்டிக்காட்டும் மோடி!
கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாடு மற்றும் சில மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை குறைக்கும்படி பல போராட்டங்களும் நடத்தப்பட்டது. இவ்வாறு விலை விற்றால் வண்டி வைத்திருப்பார்கள் இனி நடந்துதான் செல்ல வேண்டும் என பல கேலி கிண்டல்களுக்கு ஆளானார்கள். அந்த வகையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொளி வாயிலாக அனைத்து மந்திரிகள் உடனும் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில் பெரும்பான்மையாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு பற்றி பேசப்பட்டது. அதில் மோடி கூறியது, எரிபொருள் மீது உள்ள வரியை கடந்த வருடமே மத்திய அரசு குறைத்து விட்டது.
அவ்வாறு குறைத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற பொருட்களின் வாட் வரியை சில மாநில அரசுகள் குறைக்கவில்லை. வாட் வரியை குறைத்தால் மட்டுமே பெட்ரோல் டீசல் விலை குறைக்க முடியும் என்று கூறினார். அதிலும் குறிப்பாக தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் குறைக்க வேண்டும் என்று விளக்கம் அளித்தார். மீண்டும் தமிழ்நாடு போல சில மாநிலங்கள் மத்திய அரசின் உத்தரவிற்கு ஒப்புதல் அளிப்பதில்லை. அவ்வாறு ஒத்துப்போகாத சில மாநில அரசுகள் பல வேதனைகளுக்கு உள்ளாகின்றனர்.
அந்த வரிசையில் மராட்டியம் தெலுங்கானா மேற்கு வங்கம் ஆந்திரா கேரளா ஜார்கண்ட் மாநிலங்களும் அடங்கும் என்று தெரிவித்தார். மீண்டும் குறிப்பிட்டுக் கூறிய பிரதமர், சென்னையில் ரூ.111 மேலாக பெட்ரோல் விற்கப்பட்டு வருகிறது. மக்கள் நிரந்தர தீர்வு காண அதனின் வாட் வரியை குறைப்பது சிறந்தது. மேலும் வாட் வரியை குறைத்தால் மட்டுமே கூட்டாட்சி தத்துவம் சிறப்பு பெற்று காணப்படும். இவ்வாறான பொருளாதார ரீதியாக சந்திக்கும் பொழுது மத்திய மற்றும் மாநில அரசுக்கு இடையே ஒற்றுமை மிகவும் முக்கியம் என்று தெரிவித்தார்.