இவர்களா அந்த இரண்டு அமைச்சர்கள்? சிலை கடத்தல் தொடர்புடையவர்கள்! பொன் மாணிக்கவேல் கூறுவது இவர்களையா?

Photo of author

By Parthipan K

 சிலை கடத்தல் பிரிவிற்கு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. பொன் மாணிக்கவேல் பொறுப்பு ஏற்ற பின் பல இடங்களில் இருந்து கடத்தப் பட்ட சிலைகளை கண்டு பிடித்துள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சோழர் கால சிலைகளையும் கண்டுபிடித்துள்ளார். இதை தொடர்ந்து டி.எஸ்.பி காதர் பாஷா விற்கு எதிராக பொன் மாணிக்கவேல் வழக்கு பதிவு செய்திருந்தார்.

இதை தொடர்ந்து தமிழகத்தில் நடைபெறும் சிலை கடத்தல் வழக்குகளில் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐகோர்ட்டில், பழவலூர் சிலை கடத்தல் வழக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்தார், சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் என்றும், எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரியும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி. காதர் பாஷா மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நேற்று (ஜூலை 24) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தங்களையும் இணைக்ககோரி பொன்.
மாணிக்கவேல் மற்றும் யானை ராஜேந்திரன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். பொன் மாணிக்கவேலின் இணைப்பு மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிபதி, யானை ராஜேந்திரன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையில், சிலை கடத்தல் சம்பவங்களில் இரு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற்றதாகவும், பொன்.மாணிக்கவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆதாரங்களுடன் பதில்மனு தாக்கல் செய்ய பொன். மாணிக்கவேல் தரப்பிற்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார். சிலை கடத்தல் வழக்குகளில், அமைச்சர்களுக்கு தொடர்பு என்ற செய்தி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை அடுத்து அந்த இரண்டு அமைச்சர்கள் யார் என்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் என கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று போக போகத்தான் தெரியும்.

மேலும் படிக்க : திமுக அரசால் சாத்தியமில்லை என்ற திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறும் ஆலோசனை

மேலும் படிக்க : அனுமதியில்லாமல் தடுப்பணை!ஆந்திராவை தமிழக அரசு எச்சரிக்க வேண்டும் என ராமதாஸ் அறிக்கை

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.