ஆயுள் முழுவதும் இளமைப்பொலிவுடன் இருக்க.. இந்த பேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Divya

இளம் வயதிலேயே முகத்தில் சுருக்கம் இருந்தால் வயதான தோற்றத்தை காண்பித்துவிடும்.இந்த சரும சுருக்கங்களை போக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்கள்.

தேவையான பொருட்கள்..

*எலுமிச்சம் பழம்
*முட்டையின் வெள்ளைக்கரு
*தேன்

பயன்படுத்தும் முறை..

முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை கட் செய்து அதன் சாற்றை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.

பிறகு ஒரு முட்டையை உடைத்து அதில் இருக்கும் வெள்ளைக்கருவை மட்டும் எலுமிச்சை சாறில் கலந்து கொள்ளுங்கள்.

அதற்கு அடுத்து ஒரு தேக்கரண்டி தூயத் தேனை எலுமிச்சை சாறில் சேர்ந்து க்ரீமியாகும் வரை கலந்து கொள்ளுங்கள்.இந்த பேஸ் பேக்கை முகம் முழுவதும் அப்ளை செய்து அரை மணி நேரத்திற்கு உலர விடுங்கள்.

பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்கி என்றும் இளமை தோற்றத்துடன் இருக்கலாம்.

தேவையான பொருட்கள்..

*எலுமிச்சை சாறு
*கற்றாழை ஜெல்
*வெள்ளரிக்காய்

பயன்படுத்தும் முறை..

முதலில் ஒரு மீடியம் சைஸ் வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதனுள் இருக்கின்ற ஜெல்லை தனியாக பிரித்து வையுங்கள்.

பிறகு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதில் இருக்கின்ற சாறை கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.இப்பொழுது மிக்ஸி ஜார் எடுத்து நறுக்கி வைத்துள்ள வெள்ளரித் துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

பிறகு அதில் கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.இந்த பேஸ் பேக்கை முகத்திற்கு அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து வாஷ் செய்யவும்.இந்த பேஸ் பேக்கை தினமும் பயன்படுத்தி வந்தால் வயதான பிறகும் இளமை பொலிவுடன் இருக்க முடியும்.