ADMK TVK: அதிமுகவுடன் எஸ்டிபிஐ கட்சி கூட்டணியில் இருக்கும் பட்சத்தில் இதன் செயலாளர் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில், அதிமுக-வானது பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கட்டாயம் நாங்கள் கூட்டணியிலிருந்து விலகிக் கொள்வோம் என்று கூறியுள்ளார். மத்திய அரசு வக்ஃபு சட்டத்தை திருத்தி அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு இஸ்லாமியர் பெரிதும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்படி இருக்கையில் தற்போது எஸ்டிபிஐ கட்சி செயலாளரும் இது ரீதியாகவே பேட்டியளித்துள்ளார்.
சமூக நல்லிணக்கத்தை உடைக்கும் வகையில் பாஜக செயல்பட்டு வருகிறது. மேற்கொண்டு வக்ஃபு சட்டத் திருத்தம் என பலவற்றை எங்களுக்கு எதிராக செயல்படுத்தி வருகிறது . அந்தவகையில் அதனை முழுமையாக கண்டிக்கிறோம். அப்படி அதுடன் கூட்டணி வைக்கும் யாருடனும் எங்கள் கை இணையாது என்று தெள்ளத்தெளிவாக தெரிவித்துள்ளார். நாளடைவில் அதிமுக அந்த இடத்தில் இருந்தால் கூட நாங்கள் கூட்டணியிலிருந்து விலகிக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார். இது ஒரு வகையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது.
டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து விட்டு திரும்பிய எடப்பாடி பாஜகவுடன் கூட்டணிக்கு ஒப்புதல் அளித்து வந்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது. அப்படி அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் எஸ்டிபிஐ கட்சியானது கட்டாயம் பாஜகவை எதிர்க்கும்.இதனால் அதிமுக விட்டு வெளியேறும். அந்த சந்தர்ப்பத்தில் விஜய்யுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் எடப்பாடிக்கு இஸ்லாமிய மதத்தின் வாக்கு கிடைக்காமல் போகலாம். மேற்கொண்டு விஜய் அதிமுக வை எதிர்க்க ஏதுவான சூழலாகவும் இது அமைந்து விடும்.