DMK: செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைவாசம் அனுபவித்துவிட்டு வெளியே வந்தும் இவருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டது. அதேசமயம் வழக்கும் செயல்பட்டு வந்ததால் அமைச்சராக இருந்தால் சாட்சியங்கள் கலையக்கூடும் எனக் கூறி இவரது பதவி ராஜினாமா செய்ய நேரிட்டது. இந்நிலையில் 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் விடப்பட்ட டென்டரில் பண இழப்பீடு செய்துள்ளார்.
அதாவது 45 ஆயிரத்து 800 ட்ரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்வதற்காக ரூ 1,182 கோடி டெண்டர் எடுக்கப்பட்டது. இதில் டெண்டர் எடுக்கப்பட்டதில் ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக செந்தில் பாலாஜி செயல்பட்டு தமிழக அரசுக்கு சுமார் 397 கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளார். இது ரீதியாக செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் வழக்குப்பதிவு செய்யாததால் இது ரீதியாக அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது.
செந்தில் பாலாஜி மற்றும் டான்ஜெட்கோ நிர்வாக இயக்குனர் ராஜேஷ் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் இருக்கிறது. இதனால் இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் வேல்முருகன் முன்னிலையில் அமர்வுக்கு வந்தது, இதில் தமிழக அரசு சார்பாக வாதிட்ட வழக்கறிஞர், செந்தில் பாலாஜி மற்றும் டான்ஜெட்கோ இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்வது ரீதியாக சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்க இருப்பதால் தற்போது புலனாய்வு குழு விசாரணை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்ற மனுவானது செல்லாது என என கூறியுள்ளார்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து அறப்போர் இயக்கம் சார்பில் பேசிய வழக்கறிஞர், தமிழக அரசு பண இழப்பு முறைகேடு சம்பந்தமாக செந்தில் பாலாஜி மற்றும் டான்ஜெட்கோ ரீதியாக ஆதாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்க இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. மேற்கொண்டு இனி கால அவகாசம் தர முடியாது விரிவான விசாரணையை முன்வைக்க இந்த வழக்கை திங்கட்கிழமை ஒத்திவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஆனால் நீதிபதி வேல்முருகன் தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.
இந்த வழக்கு ரீதியாக நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் மேலும் ஓர் வழக்கு செந்தில் பாலாஜி மீது போடப்படுவதுடன் மீண்டும் சிறைக்கு செல்ல வாய்ப்புள்ளது என கூறுகின்றனர்.