Breaking News, State

இவர்களுக்கு மட்டும் ரூ 1000-லிருந்து 1200 ஆக உதவித்தொகை உயர்வு!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

Photo of author

By Janani

 

இவர்களுக்கு மட்டும் ரூ 1000-லிருந்து 1200 ஆக உதவித்தொகை உயர்வு!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

தமிழக அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.இதனால் மக்களின் வாழ்வில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது.அதில் குறிப்பிடத்தக்கவை, முதியோர் மற்றும் கணவரை இழந்த பெண்கள் ஆகியோருக்கான உதவித் தொகையை சென்ற ஆண்டுக் கூட ரூபாய் 1000 ல் இருந்து 1200 ஆக உயர்த்தியது.மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,500-ஆகவும் அதிகரித்தது.

வீட்டில் இருந்து வேலை செய்யும் மகளிரின் வாழ்வை மேம்படுத்தும் விதமாக கொண்டு வரப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது.இந்த திட்டம் ஒரு சில பெண்களுக்கு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த பொழுது கூட அதை சரி செய்யும் விதமாக அரசு அலுவகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மனைவிகளுக்கும் மாதம் ரூபாய் 1000 கிடைக்க வழி வகை செய்யப்பட்டது.

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் இட ஒதுக்கீடு அளித்து பெண் உரிமை போற்றிட, கலைஞர் அவர்களின் பெயரால் இந்த மகளிர் உரிமைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் வாரிய உறுப்பினர்களின் குடும்பத்தில் உள்ள ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகளுக்கு ரூபாய் 1000 கல்வி உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது அந்த வகையில் தற்போது கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கான உதவித் தொகையைம் தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

“எல்லாமே மாறப்போகுது” மக்களே கவனியுங்கள்!! தமிழக மின்வாரியத்தின் அடுத்த அதிரடி!! 

விஜய்யின் கலங்கடிக்கும் போஸ்ட்.. இவரையும் விட்டு வைக்கல!! குழப்பத்தில் அரசியல் தலைகள்!!