விஜய்யின் கலங்கடிக்கும் போஸ்ட்.. இவரையும் விட்டு வைக்கல!! குழப்பத்தில் அரசியல் தலைகள்!!
தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய் அவர்கள் அரசியல் தலைகளை தனது பதிவால் குழப்பமடைய செய்துள்ளார்.ஆரம்பத்தில் இவரது வாழ்த்து பதிவுகள் அனைத்தும் நாம் தமிழர் விடுதலை சிறுத்தை கட்சிகளை நோக்கி இருந்தது.இதனால் இவரது கூட்டணி அவர்களுடன் தான் என அரசியல் வட்டாரங்களின் பேச்சுக்கள் இருந்தது.
நாளடையில் அதிமுக-வுடன் கூட்டணி என்றும் கூறினர்.சமீபத்தில் இவரது பிறந்தநாள் அன்று வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் அறிக்கையில் கூட திமுகவை குறிப்பிடவில்லை.இதை வைத்தும் இவர் திமுகவிற்கு எதிரானவர் என்றும் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கருப்புக்கொடி தூக்கியதால் இது நிதர்சனமான உண்மை எனவும் பலர் கூறி வந்தனர்.
ஆனால் திமுகவையே கலங்க வைக்கும் வகையில் விஜய் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.அதில், எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவருக்கு வாழ்த்து கூறி விஜய் பதிவிட்டுள்ளார்.இதே போல நரேந்திர மோடி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பொழுதும் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.மத்தியில் இரு பக்கமும் நடுநிலையாக தனது ஆதரவை விஜய் தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்தில் ஆளும் மற்றும் எதிர்கட்சிக்கு குழப்பத்தியே ஏற்படுத்தியுள்ளது.