இந்த பகுதியில் இன்டர்நெட் சேவைகள் நிறுத்தம்! இந்த காரணத்திற்காகதானா!
இராணுவ வீரர்கள் அன்றாடம் நமது பாதுகாப்பிற்காக பாடுபட்டு வருகின்றனர்.சில தீவிரவாதிகள் நமது நாட்டை அளிக்க திட்டமிட்டு வருகின்றனர்.அந்தவகையில் நமது ஜம்மு காஷ்மீர் பகுதியில் பல குண்டுவெடிப்புக்களை நடத்தி வருகின்றனர்.அவ்வாறு கடந்த சனிக்கிழமை அன்று எல்லை பகுதியில் திவீரவாதிகளின் நடமாட்டம் தென்படுவதாக கூறினர்.ஸ்ரீ நகரை தலைமையிடமாக கொண்ட இராணுவ படை கமாண்டர் லெப்டினன்ட் டி.பி.பாண்டி இதுகுறித்து பேசினார்.
அதில் அவர் கூறியதாவது,தீவிரவாதிகளின் நடமாட்டம் இல்லை என்பதை உறுதி செய்த பிறகே இராணுவ வீரர்கள் தீவிரவாதிகளை தேடும் பணிகள் முடிவடையும் என கூறினார்.அவர் கூறிய ஓர் இரு தினங்களிலேயே ஸ்ரீ நகரின் நூர் பாக் பகுதியில் ஓர் போலீஸ் குழு மீது தீவீரவாதிகள் குண்டுவெடிப்பை நடத்தினர்.காவல்துறையினர் அந்த தீவிரவாதிகளை சுற்றிவளைத்தனர்.அப்பொழுது அங்கு துப்பாக்கி சூடு நடைபெற்றது.
அதனையடுத்து காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டினால் அந்த தீவிரவாதிகள் தப்பி ஓடினர்.அவர்கள் தப்பி ஓடும் போது ஏகே 47 மற்றும் ஓர் கை துப்பாக்கியை கீழே போட்டு சென்றனர்.போலீசார் அந்த துப்பாக்கிகளை கைப்பற்றினர்.அதைப்போலவே ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பந்திபோரா மாவட்டத்தில் குரேஸ் என்ற பகுதியில் திவீரவாதிகள் நடமாட்டத்தை போலீசார் தடுத்தனர்.மேலும் தீவிரவாதிகள் தாக்க வைத்திருந்த ஆயுந்தங்கள் மற்றும் வெடிபொருட்களையும் போலீசார் கைப்பற்றினர்.
இதனையடுத்து கடந்த சனிக்கிழமை அன்று கட்டுப்பாட்டு பகுதியில் சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக இராணுவ வீரர்கள் கூறினர்.அதனால் ஜம்மு காஷ்மீர் உரி பகுதியில் தற்போது இன்டர்நெட் சேவையை நிறுத்தி வைத்துள்ளனர்.மேலும் தொலைப்பேசி சேவைகளையும் நிறுத்தி வைத்துள்ளனர்.தீவிரவாதிகளின் நடமாட்டம் இல்லை என்று கண்டறிந்த பிறகே இந்த சேவைகளை மீண்டும் செயலுக்கு வரும் என கூறுகின்றனர்.