வன்முறையையும் அரசியல் கொலையையும் நிறுத்துங்கள் அரசுக்கு ஆளுநர் அறிவுரை
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும்,அம்மாநில ஆளுநர் ஜெகதீஸ் தங்கருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது.இதனிடையே சமீபத்தில் இருவருக்கும் இடையே மரியாதை நிமித்தமான சந்திப்பு நடந்தது.
இதனையடுத்து நேற்று ஆளுநர் ஒரு அறிக்கை வெளியிட்டார்.அதில் மேற்கு வங்க மாநிலத்தை பொருத்த வரையில் கொலைகளும் கலவரங்களும் அரசியல் சார்புடையதாக தெரிகிறது.2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை மையப்படுத்தி கொலைகள் நடைபெருவதாக தோன்றுகிறது.
2021 ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.வன்முறைகளையும் கொலைகளையும் தடுக்க வேண்டும்.
மேலும் வன்முறைக்கு காரணமானவர்கள் அதனை முடித்துக் கொள்ள முயற்சிப்பார்கள் என நம்புகிறேன். சமீபகாலமாக அரசுக்கும் ஆளுநர் அலுவலகத்திற்கும் இடையே நல்ல உறவு நிலவுகிறது எனவும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
காவல்துறை அதிகாரிகள் நேர்மையுடனும் நடுநிலையுடனும் செயல்பட வேண்டும்.அரசு அதிகாரிகள் மாநிலத்தில் அமைதி நிலவவும் தேர்தல் நடத்த உகந்த சூழலை உருவாக்கவும் பாடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே சந்திப்பு ஏற்பட்ட பின்பு ஆளுநர் இவ்வாறான ஒரு அறிக்கையை வெளியிட்டு இருப்பது மேற்குவங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.