குரங்குகளுக்கும் கோவக்சின் செலுத்திய கதைகள்! ஆச்சரிய தகவல்கள் கொண்ட புதிய புத்தகம்!

Photo of author

By Hasini

குரங்குகளுக்கும் கோவக்சின் செலுத்திய கதைகள்! ஆச்சரிய தகவல்கள் கொண்ட புதிய புத்தகம்!

Hasini

Stories of Kovacs paid for monkeys! New book with amazing information!

குரங்குகளுக்கும் கோவக்சின் செலுத்திய கதைகள்! ஆச்சரிய தகவல்கள் கொண்ட புதிய புத்தகம்!

உலகமே கொரோனாவின் கோரப் பிடியில் இருந்தபோது மக்களை எப்படி காப்பது என்றுதான் அரசுகள் முயற்சி செய்தன. அப்படி அந்த சமயத்தில் உதவிய ஒரு மருந்துதான் கோவக்சின் அதை உருவாக்கிய போது குரங்குகளை பிடித்து சோதனை நடத்திய பல சுவாரசிய தகவல்கள் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் பலராம் பார்கவா எழுதிய புதிய புத்தகத்தில் தற்போது எழுதி இடம்பெரும் வகையில் செய்துள்ளார்.

உலக மக்கள் தொகையில் 2 வது இடத்தில் உள்ள இந்தியாவில் கோரானா வைரஸ் தொற்று மிக அதிகமாக பரவத் தொடங்கிய போது மக்களுக்கு செலுத்துவதற்கு தடுப்பூசிக்கு எங்கே போவது என்ற கேள்வியை உலகமே கேட்டது. உலகெங்கிலும் உள்ள மனிதர்கள் இந்த கேள்விகளை எழுப்பினர். ஆனால் உள்நாட்டு தயாரிப்பான கோவக்சின், ஐதராபாத்தில் உள்ள பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து நின்று தடுப்பூசியில் உருவாக்கிய ஒரு சாதனையை நிகழ்த்தியது.

இந்த சாதனை பயணம் பல கடினமான பாதைகளை கடந்து வந்துள்ளது. எந்த ஒரு நிறுவனம் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தாலும், அது பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகே அரசால் அங்கீகரிக்கப்படும். அப்படி ஒரு நிலை தான் இதற்கும் ஏற்பட்டது. இந்த அனுபவங்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா  கோயிங் வைரல்: மேக்கிங் ஆப் கோவேக்சின்- தி இன்சைடு ஸ்டோரி என்ற தலைப்பில் ஒரு புதிய புத்தகமாக எழுதியுள்ளார்.

அதில் விஞ்ஞானிகள் சந்தித்த அறிவியல் தொழில் நுட்பங்கள், சவால்கள், ஆய்வக வலையமைப்பு, நோய்க்குறி அறிதல், சிகிச்சை, செரோ சர்வேக்கள் போன்ற பல தொழில்நுட்பங்கள் என பல விஷயங்களும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. கோவேக்சின்  தடுப்பூசியின் வெற்றி நாயகர்கள் என்று சொன்னால் மனிதர்கள் மட்டுமல்லாமல் குரங்குகளும் அடங்கும் என்றும் அவர் புத்தகத்தில் எழுதி இருந்தார். இது பற்றி மேலும் அவர் அந்த புத்தகத்தில் இவ்வாறெல்லாம் எழுதி இருந்தார்.

கோவேக்சின் தடுப்பூசியின் வெற்றிக்கதை நாயகர்கள் மனிதர்கள் மட்டுமல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இன்றைக்கு உயிர் காக்கிற இந்த தடுப்பூசியை கோடிக்கணக்கானோர் பெற்றுக்கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு 20 குரங்குகளும்கூட பொறுப்பு ஆகின்றன. இந்த தடுப்பூசி சிறிய அளவிலான விலங்குகளிடம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் என்று நாங்கள் தெரிந்து கொண்டோம். அடுத்து, மனிதர்களுடன் ஒப்பிடுகிறபோது, அதே போன்ற உடல் அமைப்பு, நோய் எதிர்ப்பு அமைப்புகளை கொண்டுள்ள குரங்குகள் போன்ற பெரிய விலங்குகளிடம் சோதிக்க வேண்டிய கட்டம் வந்தது.
மருத்துவ ஆராய்ச்சியில் உலக அளவில் செம்முக குரங்குகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்திய ஆய்வகங்களில் அவற்றை செயற்கை முறையில் உருவாக்குவதில்லை என்கிறபோது, அந்த குரங்குகளுக்கு எங்கே போவது?
பல்வேறு உயிரியல் பூங்காக்கள், நிறுவனங்களை தொடர்பு கொண்டு விசாரித்தாயிற்று. தேசிய வைராலஜி நிறுவனத்தில் இருந்த 2 குரங்குகள் வயதானவை என்பதால் அவை ஆராய்ச்சிக்கு ஏற்றவை அல்ல என்பதால் அதிலும் சிக்கல்கள் வந்தன. ஆராய்ச்சியாளர்களுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியுடன் கூடிய இளம் குரங்குகள்தான் வேண்டும்.
இதற்காக அர்ப்பணிப்பு உணர்வுமிக்க ஒரு குழுவினர் மராட்டியத்துக்கு சென்றனர். ஆனால் தொடர் முடக்கம் காரணமாக அங்கும் இந்த வகை குரங்குகள், ஊருக்குள் உணவு கிடைக்காத காரணத்தால் அடர்ந்த காடுகளுக்குள் சென்று விட்டது தெரிய வந்தது. பின்னர் மராட்டிய வனத்துறை உதவியுடன் அவற்றை நாக்பூர் அருகே கண்டறிந்தோம்.
அடுத்த சிக்கல், பிடித்து வந்த அந்த விலங்குகளை சோதனைக்கு முன்னர் அவற்றுக்கு கொரோனா வராமல் பாதுகாப்பதில் சவால்கள் வந்தன. ஏனெனில் அவற்றுக்கு பராமரிப்பாளர்கள், கால்நடை மருத்துவர்கள், சுத்திகரிப்பு தொழிலாளிகளிடம் இருந்து கொரோனா தாக்கி விடலாம். எனவே அவர்கள் அனைவருக்கும் வாரம் 2 முறை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியதாயிற்று. கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற செய்ய வேண்டியதாயிற்று.
இப்படியாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளையெல்லாம் மேற்கொண்டு, குரங்குகளை கொண்டு கோவேக்சின் தடுப்பூசி சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்தோம். இந்த குரங்குகளும் பாராட்டுக்குரியவை” என்று அவர் அந்த புத்தகத்தில் எழுதி உள்ளார்.