அமைச்சர் செயலாளர் இடையே டிஷ்யூம்! இடையில் புகுந்த முதல்வர்!

0
70

வீட்டுவசதி துறை செயலாளராக பணிபுரிந்து வரும் ராஜேஷ் குமார் அவர்களுக்கும், அந்த துறையின் அமைச்சராக பணிபுரியும் முத்துசாமி அவர்களுக்கும் எப்பொழுதும் ஏழாம் பொருத்தமாகவே இருப்பதாக அந்த துறை முழுவதும் பரவலாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. பொதுமக்களின் நலனுக்காக எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றலாம் என்று தெரிவித்தால் கூட அதற்கெல்லாம் நிதி இல்லை என்பது போன்ற ஏதேதோ காரணங்களை தெரிவித்து திட்டத்தை ஆரம்பத்திலேயே கிடப்பில் போட வைத்து விடுகிறாராம். அந்த துறையின் செயலாளர் துறை ரீதியிலான ஆய்வின் போதும்கூட இதுகுறித்து அமைச்சருக்கும் செயலாளருக்கும், நேரடியாக வாக்குவாதம் நடந்து கொண்டு இருப்பதாக அதிகாரிகள் பதற்றமாக தெரிவித்து வருகிறார்கள்.

இதற்காக தான் வெளிநாட்டு பணிகளில் இருந்த உங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தாரா முதலமைச்சர்? என்றெல்லாம் கேட்டிருக்கிறாராம். அந்தத் துறையின் அமைச்சர் எதற்கும் அசைந்து கொடுக்காத அந்த துறையின் செயலாளர் தன்னுடைய நிலையில் இருந்து கொஞ்சம் கூட கீழே இறங்கி வர தயாராக இல்லையாம். இதனை தொடர்ந்து என்னுடைய அமைச்சர் பதவிகளில் எத்தனையோ செயலாளர்களை நான் பார்த்து இருக்கின்றேன் உங்களைப் போன்ற ஒருவரை இதுவரையில் பார்த்தது கிடையாது என்று தெரிவித்த அமைச்சர், முதலமைச்சரிடம் நான் பேசிக் கொள்கிறேன். அவர் உங்களை மாற்றினால் மட்டுமே இந்தத் துறையில் எதையும் செய்ய இயலும் என்று தெரிவித்துவிட்டு சென்றுவிட்டாராம். அதன் பின்னர் துறை ரீதியிலான ஆய்வுகளையும் தவிர்த்து விடுகிறாராம் அமைச்சர்.

இதற்கு நடுவில் முதலமைச்சரிடம் வெளிப்படையாக அனைத்தையும் தெரிவித்துவிட்டாராம் அமைச்சர் உடனே அவரை அங்கிருந்து மாற்றிவிட்டு புதிய நபர் ஒருவரை நியமித்தால் மட்டுமே துறையில் வேகமாக செயல்பட இயலும் என்றும், தெரிவித்து இருக்கின்றார். அமைச்சர் அதற்கு முதலமைச்சரின் தரப்பிலோ சற்று பொறுமையாக இருங்கள் மிக விரைவில் நல்லது நடக்கும் என தெரிவித்து அமைச்சர் முத்துசாமியை அனுப்பி வைத்திருக்கிறாராம் முதலமைச்சர் ஸ்டாலின். இதன்காரணமாக துறை செயலாளருக்கு எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றலுக்களுக்கான உத்தரவு வரலாம் என்று அமைச்சர் தரப்பு எதிர்பார்த்து காத்திருக்கிறது.