Breaking: மாண்டஸ் புயல் பாதிப்பு.. அமைச்சர் வெளியிட்ட நிவாரணம்!

0
48
Storm relief for whom? Important information released by the minister!
Storm relief for whom? Important information released by the minister!

Breaking: மாண்டஸ் புயல் பாதிப்பு.. அமைச்சர் வெளியிட்ட நிவாரணம்!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்மண்டலமானது வலுப்பெற்று மாண்டஸ் புயலாக மாறியது. இந்த புயல் காரணமாக சென்னை காஞ்சிபுரம் கடலூர் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்து உத்தரவிட்டனர்.

அதேபோல இந்த புயல் நேற்று இரவு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை முதல் அனைத்து மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்து வந்தது.

மேலும் இந்த மண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்கள் பெருமளவு சேதம் அடைந்துள்ளதையடுத்து ஐந்து உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.

ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ராமச்சந்திரன், நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட இடங்கள் மீண்டும் சீரமைக்கப்படும் என்று கூறியுள்ளதை அடுத்து இன்று மாலைக்குள் அனைத்து மாவட்டங்களும் பழைய நிலைக்கு திரும்பும் எனக் கூறியுள்ளார்.அதேபோல தற்போது வரை பாதிக்கப்பட்டுள்ள இடங்களை கண்டறிந்து கணக்கெடுப்பு நடைப்பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.