வீட்டின் சுவர்களை பெயர்த்து சாப்பிடும் வினோத பழக்கம்! ஒரு வாரத்தில் மட்டும் 3.2 சதுர அடி சாப்பிடும் அவலம்!

Photo of author

By Hasini

வீட்டின் சுவர்களை பெயர்த்து சாப்பிடும் வினோத பழக்கம்! ஒரு வாரத்தில் மட்டும் 3.2 சதுர அடி சாப்பிடும் அவலம்!

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்தவர் நிக்கோலே. இவருக்கு சிறுவயதில் இருந்து பெல்பம், சாக்பீஸ் போன்ற பொருட்களை சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் வளர்ந்து தற்போது அவர் வீட்டின் சுவர்களை சாப்பிடும் அளவிற்கு தீவிரமாக இருக்கின்றது.

இவருக்கு இருக்கும் இந்த பழக்கம் ஒரு டிவி நிகழ்ச்சி மூலம் நான் வெளியே தெரியவந்தது என்பது அதைவிட வேதனைக்குரிய விஷயம். அவருக்கு இந்த சுவரின் மணம் பிடிக்கும் என்பதன் காரணமாக, தன் வீட்டிலுள்ள சுவரை அவ்வப்போது சுரண்டி, சுரண்டி சாப்பிட்டுள்ளார். ஒவ்வொரு வாரமும் இந்த மாதிரி குறைந்தது 3.2 சதுரடி சுவரை ஆவது சாப்பிட்டு விடுவாராம்.

தற்போது இந்த சுவரை சாப்பிடும் பழக்கத்திற்கு அடிமையாகவே மாறி விட்டதாகவும் கூறுகின்றனர். சில நேரங்களில் வேறு வீட்டிற்குச் சென்றால் கூட அங்குள்ள சுவர்களையும் சாப்பிடும் பழக்கம் இவருக்கு இருக்கிறது என்றும் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த பழக்கம் முதலில் இவரது தாயார் இறந்தபோது ஏற்பட்ட துக்கம் காரணமாக துவங்கியதாம்.

தற்போது அதை விட முடியாமல் தவித்து பாடுபட்டு வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக இப்படி சாப்பிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவரை பெயர்த்து சாப்பிடும் வினோத பழக்கம் கொண்ட நிக்கோல் என்ற பெண்ணுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்தும் அந்த பழக்கத்தை கைவிட முடியாமல், என்னால் நிறுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

காய்ந்த சுண்ணாம்பின் மணம் மிகவும் பிடிக்கும் என்பதால் ஒரு வாரத்திலேயே 3.2 சதுர அடி சுவரை சாப்பிட்டு வருவதாகவும் கூறுகின்றனர். இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.