வெறிநாய் கடியால் 8 பேர் படுகாயம் : மேல் சிகிச்சைக்கு வழி இன்றி மக்கள் அவதி

Photo of author

By Parthipan K

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தாலுகா, எருமப்பட்டி ஒன்றியம், பொட்டிரெட்டிபட்டி ஊராட்சியில் , 40 க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் சுற்றி கொண்டிருக்கின்றன. வெறி நாய் தாக்குதலில் பலர் காயப்பட்டு அரசு மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுவரை 15க்கும் மேற்பட்டோர் இந்நாயின் தாக்கத்தில் ஈடுபட்டு அவசர சிகிச்சையில் உள்ளனர்.நேற்று முன்தினம், அப்பகுதியை சேர்ந்த தவமணி, 55, அமிர்தம்72,செல்லம் 52,அமுதா 38, துளசி 57, மூக்கன் 50 உள்ளிட்ட எட்டு பேரை நாய் கடித்ததில் பாதிக்கப்பட்டனர்.

அவர்களை அப்பகுதியில் உள்ள எருமம்பட்டி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளித்தனர்.நாமக்கல் அரசு பொது மருத்துவமனையில் தொடர்ந்து மூன்று நான்கு முறை தடுப்பூசி போட வேண்டும் என்ற மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.பேருந்து வசதி இல்லாததால் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இதனால் சேந்தமங்கலம் தாலுகாவில் பொட்டிரெட்டிபட்டி ஊராட்சியில் அரசு துணை சுகாதார நிலையம் அமைக்க கோரி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.