உணவுத்துறை அதிகாரி போட்ட ஸ்ட்ரிட் ஆர்டர்!! கொண்டாட்டத்தில் ரேஷன் அட்டைதாரர்கள்!
இரண்டு வருடங்களுக்கு முன்பே ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை என்ற திட்டத்தை கொண்டு வந்தனர். இத்திட்டத்தின் மூலம் வெளியூர்களில் வேலை செய்து வருபவர்கள்,அங்குள்ள பகுதிகளிலேயே ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.அதனையடுத்து ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும் என்றால் பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இந்த பயோமெட்ரிக் முறையால் பல இடங்களில் இருந்து புகார்கள் வந்தது.
பயோ மெட்ரிக் முறையால், கைரேகை பதிவாகுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.பலரால் பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வந்தனர். அக்காரணத்தினால் அத்திட்டத்தை ரத்து செய்து தற்பொழுது கருவிழி முறையை கொண்டு வந்துள்ளனர். கடந்த மாதம் முதல் கருவிழி முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இச்சமயத்தில், அடுத்த புகாராக வெளி ஊர்களில் வேலை செய்பவர்கள் அங்குள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க முயன்றால் அவர்களுக்கு தராமல் காலதாமதம் செய்து வருவதாக கூறுகின்றனர்.
தினசரி வாங்கும் நபர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களை தவிர்த்து, ஆறு சதவீதம் கூடுதலாக தான் ஒவ்வொரு நியாய விலை கிடைக்கும் பொருட்கள் அனுப்பப்படுகிறது. இந்த ஆறு சதவீதமானது, வெளியூர்களுக்கு இடம் பெயர்ந்தவர்கள் வாங்கி பயன்பெறும் வகையில் அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால் பல ரேஷன் கடை ஊழியர்கள் பொருட்களை வழங்காமல், பல காரணங்களை சொல்லி அவர்களை திரும்பி அனுப்பி வைத்து விடுகின்றனர்.
அவ்வாறு உள்ள ஊழியர்களை எச்சரித்து உளவுத்துறை அதிகாரி ஓர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒவ்வொரு நியாய விலை கடைகளிலும் அங்கு சுற்றியுள்ள பகுதி மக்களுக்கும், வேறொரு ஊரிலிருந்து இடம் பெயர்ந்தவர்களுக்கும் முறையான பொருட்களை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காமல் இருக்கும் நியாய விலை கடை ஊழியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவர்களை கண்காணிக்கவே ஒரு குழு அமைத்த அனைத்து ரேஷன் கடைகளையும் ஆய்வு செய்யப் போவதாக தெரிவித்தார். மேலும் அங்குள்ள பொருட்கள் குறித்தும் சோதனை செய்வதாக கூறினார்.அனைத்து மக்களுக்கும் தடையின்றி ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். விதிமுறைகளை மீறி நடக்கும் ரேஷன் ஊழியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.