தமிழ் திரையுலகில் தற்சமயம் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார் இவர் நடிப்பில் இயக்குனர் வினோத்குமார் அவர்களின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் வலிமை. இந்த திரைப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா ஐயப்பா, சுமித்ரா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
போனிகபூர் தயார் செய்யும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித்குமாரின் பிறந்தநாளில் வலிமை திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாவதாக இருந்த சூழலில் நோய் தொற்று இரண்டாவது அலை காரணமாக, அது தள்ளி வைக்கப்பட்டு விட்டது.
ஆனால் இந்த திரைப்படத்தின் கதையின் கரு என்ன என்பது பற்றி நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள் தேடாத இடமில்லை. ஏனென்றால் பல முக்கிய நபர்களையும் வலைதள பக்கத்தில் தொடர்புகொண்டு இதனுடைய அப்டேட்கள் என்ன என்று வினவும் ரசிகர்களும் இருந்து வருகிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இப்படி அதிக எதிர்பார்ப்பு எழுந்திருப்பதால் இந்த திரைப்படம் வசூல் வேட்டையை தொடங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால் ஒரு புறம் இப்படி அதீத எதிர்பார்ப்புடன் ஒரு திரைப்படத்தை கொண்டு வந்தால்தான் அதிக லாபம் பார்க்க முடியும் என்று தயாரிப்பு குழு முடிவு செய்துதான் இவ்வாறு காலம் கடத்துகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 95 சதவீதம் முடிவடைந்து விட்டதாக தெரிவிக்கிறார்கள். அதோடு இந்த வருடத்தின் இறுதிக்குள் இந்த திரைப்படம் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறான சூழலில் வலிமை திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது என்ற தகவல் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. தற்சமயம் இதற்கு ஒடிடி டிவிட்டர் தரப்பு மறுப்பு தெரிவித்து இருக்கிறது.