மளிகை பொருட்கள் வாங்கினால் வலிமை டிக்கெட் இலவசம்!

0
234

மளிகை பொருட்கள் வாங்கினால் வலிமை டிக்கெட் இலவசம்!

அஜித் தற்போது நடித்து முடித்து நாளை (பிப்ரவரி 24) திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் வலிமை. இந்த படத்தை காண ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டிருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதமே வலிமை படம் வெளியாவதாக இருந்தது.

ஆனால் அந்த சமயத்தில் நாடெங்கும் கொரோனா மற்றும் கொரோனாவின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸின் பாதிப்பு அதிகரித்து கொண்டு வந்தது. எனவே அந்த சூழ்நிலையில் தொற்றை கட்டுப்படுத்த நாட்டின் பல மாநிலங்களிலும் ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

எனவே அதன் காரணமாக வலிமை படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், நாடெங்கும் தொற்றின் பரவல் குறையத் தொடங்கியதை அடுத்து நாட்டின் ஒவ்வொரு மாநிலமாக ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுபாடுகளை தளர்த்திக்கொண்டு வந்தன. இதையடுத்து ஒத்திவைக்கப்பட்ட வலிமை படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது.

அதன்படி வலிமை திரைப்படம் பிப்ரவரி 24 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது என வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் வலிமை திரைப்படம் ரசிகர்களின் பலநாள் காத்திருப்புக்கு பிறகு திரையரங்குகளில் நாளை வெளியாக உள்ளது.

மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு நடிகர் அஜித்தின் வலிமை படத்திற்கான புரமோஷனை சென்னை, மும்பை மற்றும் பெங்களூரு என பல இடங்களில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் நடத்தி உள்ளார். இதனிடையே வலிமை படம் நாளை வெளியாக உள்ள நிலையில், வேலூரில் உள்ள தென்னிந்திய பன்மாநில கூட்டுறவு அங்காடி மையத்தில் ரூ.2999-க்கு மேல் மளிகை பொருட்கள் வாங்கினால் வலிமை டிக்கெட் இலவசம் என அறிவித்துள்ளனர்.

Previous articleவாட்ஸ்அப்பில் விரைவில் வர உள்ள புது அம்சம்!
Next articleஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி நிச்சயம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here