பாதாள சாக்கடையில் இறங்கினால்.. 30 லட்சம் மற்றும் அரசு வேலை!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவு நீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்குவதால் விஷவாயு தாக்கி உயிரிழக்க நேரிடுகிறது. இந்த இழப்பை தவிர்ப்பதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு இதற்கென்று புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி இனி வரும் நாட்களில் பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவு நீர் தொட்டிகளில் கட்டாயம் மனிதர்களை இறங்க விடக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர்.
இருப்பினும் இந்த பாதாள சாக்கடைகளில் இறங்கி விஷ வாயு தாக்கி மனிதர்கள் இறக்கும் நிலையானது தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. இதனை எதிர்த்து 2017 ஆம் ஆண்டு சவாய் கர்மச்சாரி அந்தலோன் என்ற அமைப்பானது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கானது நேற்று அமர்வுக்கு வந்த நிலையில் நீதிபதிகள் கூறியுள்ளதாவது, இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பின்பு தான் இந்த பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்குவது தடை என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது.
ஆனால் இதனை முழுமையாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. அதேபோல பாதாள சாக்கடைகளில் இறங்கி விஷவாயு தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு 30 லட்சம் வரை தற்பொழுது இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இனி வரும் நாட்களில் அதனை மூன்று வருடத்திற்கு ஒருமுறை அதிகரிக்க வேண்டும். மேற்கொண்டு அந்த குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் யாரேனும் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த 2013 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட சட்டமானது தமிழகத்தில் தீவிர படுத்த வேண்டும். அதேபோல மனிதர்கள் பாதாள சாக்கடையில் இறங்குவதற்கு பதிலாக இயந்திரங்களை உபயோகிக்கலாம் என்று தமிழ்நாடு அரசிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.