நடிகர் சூர்யாவின் மீது வழக்கு தொடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! நீதிமன்றத்தில் அதிரடி உத்தரவு?!

Photo of author

By Parthipan K

நடிகர் சூர்யாவின் மீது வழக்கு தொடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! நீதிமன்றத்தில் அதிரடி உத்தரவு?!

இயக்குனர் ஞானவேல் இயக்கிய ஜெய்பீம் திரைப்படத்தில் சூர்யா நடித்துள்ளார்.இப்படம் இந்து வன்னியர் சமூக மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. அவர்களை இழிவுபடுத்தியும் பிற மக்களின் மனதை வெறுப்பை உருவாக்கும் வகையிலும் அப்படம் அமைந்திருந்தது.

தெய்வத்தின் அக்னி குண்டத்தையும் மகாலட்சுமியும் அவர்கள் வணங்கும் குருவின் பெயரையும் இழிவுப்படுத்திய காட்சிகள் அப்படத்தில் அமைக்கப்பட்டிருந்தது. நடிகர் சூர்யா மற்றும்  இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க கோரி ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவனத் தலைவர்  என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தன் கையில் எடுத்து விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் எட்டில்  வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. அதனடிப்படையில்  வேளச்சேரி போலீசார் நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு  எதிராக  வழக்கு பதிவுகளை செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யவும் விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்கள்.

அந்த மனுவிலுள்ள  புகாரை தாக்கல் செய்யும் முன்னரே  படத்தில் காலண்டர் இடம் பெற்றுள்ள சர்ச்சைக் காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டது. வன்னியர் சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி, அப்படத்தில் அப்படிப்பட்ட  ஆதாரங்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. இதை ஏற்றுக்கொண்ட சூர்யா மற்றும் ஞானவேல் தாக்கல் செய்த மனு மீதான  விசாரணையை ஜூலை 21ஆம் தேதிக்குள் தள்ளி வைத்த நீதிபதி அதுவரை இந்த வழக்கில்  கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.