ரேசன் கடைகளில் இனி இதை வாங்க கட்டாயப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை – அமைச்சர் அதிரடி

0
141

ரேசன் கடைகளில் இனி இதை வாங்க கட்டாயப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை – அமைச்சர் அதிரடி

ரேசன் கடைகளில் சோப்பு, அரிசிமாவு உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்க பொதுமக்களை கட்டாயப்படுத்த கூடாது என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ரேசன் கடைகள் மூலம் இலவச அரிசி, குறைந்த விலையில் பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேசன் அட்டை உள்ளவர்கள் பொருட்கள் வாங்க வரும்போது கூடுதலாக சோப்பு, அரிசிமாவு உள்ளிட்ட பொருட்களை வாங்க வற்புறுத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமே இருந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ரேசன் கடைகளிலும் சோப்பு, சேமியா, வாங்காவிட்டால் ரேசன் பொருட்கள் கிடையாது என்று ஊழியர்கள் தெரிவிப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையில் இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் புதிய ரேசன் கடையை திறந்துவைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ரேசன் கடைகளில் சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்க எந்த ஊழியர்களும் கட்டாயப்படுத்த கூடாது. அவ்வாறு யாரேனும் கட்டாயப்படுத்தினால் அந்த ரேசன்கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும்  இதுகுறித்து பொதுமக்கள் தாராளமாக புகார் அளிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

Previous articleஇந்த மாவட்டத்தில் குரங்கம்மை நோய் தொற்றுக்கு பெண் பலி! சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு!
Next articleஇந்தப் பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!