கடுமையான உத்தரவுகள் அமல்படுத்த வேண்டும்! ஒன்றிய அரசின் எச்சரிக்கை கடிதம்!

Photo of author

By Rupa

கடுமையான உத்தரவுகள் அமல்படுத்த வேண்டும்! ஒன்றிய அரசின் எச்சரிக்கை கடிதம்!

கரோனா தொற்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் நமது நாட்டில் இன்றளவும் பரவி வருகிறது .இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.ஒவ்வொரு முறையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும்போது ,பின்பற்றும் மக்கள் அதற்கடுத்து பின்பற்ற மறந்துவிடுகின்றனர்.அதனால் தொடங்கிய இடத்திலிருந்து மீண்டும் கொரோனா பரவும் அபாயம் ஏற்படுகிறது.தற்போதுவரை முதல் அலை இரண்டாவது அலை அதனை அடுத்து மூன்றாவது அலை என  உருவாகியுள்ளது.மக்கள் நலன் கருதி இரண்டு ஆண்டுகளாக ,நாடு முழுவதும் ஊரடங்கு காலமாகவே இருந்தது. அதனையடுத்து சில தளர்வுகளை மாநில அரசுகள் அமல்படுத்தியது.

மக்கள் பொது இடங்களில் உடனே கூட்டம் கூடுவது எச்சரிக்கைகளை கடைப்பிடிக்காமல் இருப்பது என சகஜமாக இருக்கின்றனர்.அதனால் ஒன்றிய உள்துறை செயலாளர் அதைப் அஜய் பல்லா  எச்சரிக்கை விடுத்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் அவர் கூறியதாவது, தற்பொழுது அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் அற்ற தளர்வுகள்  அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்த தளர்வுகளில் கொரோனா வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றாமல் இருக்கின்றனர்.இக்காரணங்களினால் மூன்றாவது அலை தொடக்கத்திற்கு இதுவே வழிவகுத்துவிடும் என்ற அச்சம் பரவலாக உள்ளது.

அத்தோடு கொரோனா இரண்டாவது அலையே இன்றளவும் முடிவு பெறாமல் உள்ளது.அதற்கு இடையில் பொதுமக்கள் கொரோனாவின் விதி முறைகளை கடைப் பிடிக்காமல் இருந்தால் மூன்றாவது அலைக்கும் தங்களின் வழிவகுப்பது போல் ஆகிவிடும் .அதனால் அனைவரும் கொரோனா விதி முறைகளை கடைப்பிடித்து நடக்கவேண்டும்.அதேபோல மக்கள் அதிகமாக கூடப்பட்டு  அதிக அளவு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டால் மீண்டும் அந்த இடங்களில் ஊரடங்கும் அமல்படுத்தலாம் என்றும் கூறினார்.

அதேபோல் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கொரோனாவின் விதிமுறைகளை சரியாகப் பின்பற்றுகிறார்களா என மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.கொரோனா தடுப்பூசி செலுத்துவதும் வேகமாக அது அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.கொரோனா பரிசோதனை செய்யும் முகாம்களும் குறைக்க கூடாது என்று தெரிவித்துக் கொண்டார்.எந்த  மாநிலங்களிலாவது  உத்தரவுகள் கடுமையாக அமல் படுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.