ஓட்டுனர்களே உஷார்! கடுமையான புதிய சட்டங்கள்! என்னென்ன சட்டம் தெரியுமா?

Photo of author

By Parthipan K

போக்குவரத்து சட்ட மசோதாவின் அடிப்படையில் மத்திய அரசு பல திட்டங்களை மாற்றி வருகிறது. அப்படி இருக்க வாகனங்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கு பல திட்டங்களை மாற்றி அறிவித்துள்ளது. சட்டங்கள் மிக கடுமையாக இருந்தால் மட்டுமே ஓட்டுனர்கள் சரியாக இருக்கும் நிலை ஏற்படும்.

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட மசோதாவின் அடிப்படையில், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுவதற்கு தற்போது 500 ரூபாயாக இருக்கும் அபராதத் தொகை 5,000 ரூபாயாகி இருக்கிறது.

வேகத்தை மீறி வாகனத்தை இயக்குவதற்கு தற்போது விதிக்கப்பட்டு வரும் அபராதம் 1,000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

தலைக்கவசம் இல்லை எனில் 100 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், தற்போது அது 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், 3 மாதங்கள் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மது அருந்திவிட்டு குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர் இனி 10000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இதற்கு முன்னதாக அது 2000 ரூபாயாக இருந்தது.

விபத்தின் காரணமாக ஏற்படும் பாதிப்பின் வீரியத்தை குறைக்கும் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்போருக்கு விதிக்கப்பட்ட அபராதம் 5000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சாலைவிபத்தில் உயிரிழப்போருக்கு அரசின் சார்பில் 25,000 ரூபாய் இழப்பீடாக கொடுக்கப்பட்டு வரும் நிலையில், அது 2 லட்சம் அல்லது அதற்கு மேலாக உயர்த்தப்பட்டுள்ளது.

சிறுவர்கள் செய்யும் விதிமீறல்களுக்கு தவறுகளுக்கு அவர்களது பாதுகாவலர்கள் அல்லது வாகனத்தின் உரிமையாளரே பொறுப்பு. அல்லது தங்களது கவனத்துக்கு கொண்டுவரப்படாமல் சம்பவம் நடைபெற்றதை உறுதி செய்ய வேண்டும்.

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய முன்வருபவர்கள் மீது சட்டரீதியிலான பாதுகாப்பு கொடுக்கப்படும். அதாவது, விபத்தில் பாதிக்கபட்ட ஒருவருக்கு உதவி செய்தவர் தனது தனிப்பட்ட விவரங்கள் குறித்து காவல்துறையினரிடமோ அல்லது மருத்துவர்களிடமோ கூறுவது அவசியமில்லை.

ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கும் அவகாசம் ஒரு மாதத்திலிருந்து, ஓராண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட விபத்துகளில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மத்திய போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்துவதன் மூலம், இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க முடியுமென்று நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எவ்வளவோ கடுமையான சட்டங்கள் போட்டாலும் தவறு செய்பவன் பார்த்து தானே திருந்த வேண்டும். ஊழல் செய்யும் அதிகாரிகள், அரசியல் அமைப்புக்கள், மற்றும் மக்கள் இவர்கள் தானே திருந்தினால் மட்டுமே சாத்தியம்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்