அதிர்ச்சி பலத்த காற்று வீசுவதால் – வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கை!
தமிழகத்தில் வருகிற 8ந் தேதி முதல் ஜனவரி 12ம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பலத்த காற்று வீசுவதன் காரணமாக எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடலோர பகுதிகளிலும் மழை நீடித்து வருகிறது. வருகிற 8ம் தேதி முதல் கடலோர பகுதிகளில் மழை அதிகரிக்கக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் ஒரு குறைந்த காற்றழுத்தத்தின் காரணமாக தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், ஜனவரி 12-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை நீடிக்கும் என தெரிவித்துள்ளது.
நாளை மறுநாள் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் இலங்கையை ஒட்டி உருவாக உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஜனவரி 9ம் தேதி தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.
கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ள வானிலை ஆய்வு மையம் ஜனவரி 10ம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் பலத்த காற்று வீசுவதாகவும் எனவே அப்பகுதிகளுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.