கொரோனாவுடன் நீட் தேர்வு எழுத வந்த மாணவனுக்கு தேர்வு எழுத மறுப்பு !! கரூரில் பரபரப்பு

Photo of author

By Parthipan K

கொரோனாவால் மாணவன் ஒருவன்  நீட் தேர்வு எழுத ,தேர்வு மையத்திற்கு சென்றபொழுது அவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு எழுதுவதற்காக காருடையம்பளையம் , தனியார் பொறியியல் கல்லூரிக்கு சென்ற மாணவனைக்கு தேர்மல் பரிசோதனை செய்ப்பட்டது .பிறகே ஆனைத்து மாணவ மாணவியர் அனுமதிக்கப்பட்டனர். அதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வெள்ளக்கோயில் பகுதியை சேர்ந்த மாணவனொருவன் தேர்வு எழுத சென்றிருந்தான்.

சில நாட்களுக்கு முன் அவரது தந்தை கொரோனா  நோய் தொற்றால்  உயிரிழந்ததையடுத்து, இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்த மாணவனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இருப்பினும் தேர்வு எழுதுவதற்காக மாணவன் மருத்துவ சான்றிதழ்,மற்றும்  உரிய கவணத்துடன் தேர்வு அலுவலரிடம்  காண்பித்தார்.
அப்போதும் ,மாணவனுக்கு தோற்று பாதிப்பு இருப்பதால்  தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது .அதேசமயம் தேர்வு எழுத முடியாத காரணத்தை பதிவு செய்து கொள்கிறோம் என தேர்வு அலுவலர் கூறினார்.

மேலும் இவருக்கு தனியாக வேறு நாட்களில் தேர்வு எழுத வாய்ப்பு இருப்பதாக தேர்வு அலுவலர் அரியுரியதின்படி ட மாணவன் திரும்பி அனுப்பி வைக்கப்பட்டார்.