மாணவர்களே ரெடியா.. பேங்கில் கிரெடிட்டாகும் ரூ 50000!! தமிழக அரசின் திடீர் அறிவிப்பு!!
தமிழக அரசானது படிக்கும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. குறிப்பாக புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு ஐம்பதாயிரம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
குறிப்பாக தமிழ் புதல்வன் திட்டமானது நடப்பாண்டு முதல் அமலுக்கு வந்துள்ளது. பெண்களின் இடைநிற்றல் கல்வியை தடுப்பதற்காகவே புதுமைபெண் திட்டம் மூலம் மாதம்தோறும் ஆயிரம் வழங்கப்படுகிறது. இதே போலவே ஆண்களுக்கும் ஆயிரம் வழங்கும் திட்டம் இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு வீட்டில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் அல்லது அதற்கு மேற்பட்டு இருந்தாலும் அவர்களில் ஒருவருக்கு 25 ஆயிரம் வீதம் இருவருக்கும் 50,000 வழங்கப்படும்.
இந்தத் தொகையானது அவர்கள் 18 வயது பூர்த்தி அடையும் பொழுது பெற்றுக்கொள்ளலாம். அதே போல தான் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்தும் பொருளாதாரத்தில் பின்னடைவை சந்தித்திருக்கும் குடும்பத்தை சார்ந்த மாணவர் மற்றும் மாணவிகளுக்கும் அவர்களின் பட்டைய படிப்பிற்காக ஐம்பதாயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிட்டு 25 பேர்தான் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இதே போல கடந்த திமுக ஆட்சியில் கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்டவைகளில் அவர்களின் கட்டணமானது தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது மாணவர்களுக்கு இந்த 50,000 வழங்குவது குறித்து ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி விரைவிலேயே தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்க நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.