மாணவிகளே ரெடியா!! ஸ்கூட்டர் வாங்க இந்த ஆவணங்கள் கட்டாயம்.. அரசு வெளியிடப்போகும் சூப்பர் அறிவிப்பு!!
கடந்த வருடம் தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எண்ணற்ற பல அறிக்கைகளை வெளியிட்டது. அதிலும் குறிப்பாக 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு இ ஸ்கூட்டர் மற்றும் தமிழ்நாட்டில் உள்ளதைப் போலவே இலவச பேருந்து பயணம் உள்ளிட்டவைகள் அதில் அடங்கும். அந்தவகையில் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றியடைந்தது. மேற்கொண்டு காங்கிரஸ் 18 வயது நிரம்பிய கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு உதவி புரியும் வகையில் இ ஸ்கூட்டர் வழங்கப்படுவதாக தெரிவித்திருந்தனர்.
தற்பொழுது 12ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்து படித்தும் வருகின்றனர். ஆனால் தற்பொழுது வரை ஸ்கூட்டர் வழங்குவது குறித்து இந்த தகவலும் வெளியிடவில்லை. இது எப்பொழுது வழங்கப்படும், அவ்வாறு வழங்கும் பட்சத்தில் தகுதி மற்றும் கல்வி அடிப்படையில் வழங்கப்படுமா என பல்வேறு கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த திட்டம் எப்பொழுது செயல்படுத்தப்பட்டாலும் கட்டாயம் மாணவர்களுக்கு ஓட்டுனர் உரிமம், கல்வியில் சேர்ந்ததற்கான அடையாள அட்டை உள்ளிட்டவைகள் கேட்கப்படும் என்று கூறியுள்ளனர்.
இது பெண்களின் நலன் மற்றும் கல்வியின் உதவிக்காக இந்த திட்டம் உள்ளது.இது செயல்முரைக்கும் வரும் பட்சத்தில் 18 வயது நிரம்பிய அனைத்து மாணவர்கள் கையிலும் ஸ்கூட்டர் இருக்கும்.அதுமட்டுமின்றி, இந்த ஸ்கூட்டரானது குறைந்த வேகத்தில் செல்லும் படி பிரத்தேகமாக தயாரிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.