வகுப்பறையில் மாணவியிடம் தலைமை ஆசிரியர் பாலியல் அத்துமீறல் , சிக்கியது எப்படி?

Photo of author

By Parthipan K

பள்ளியின் தலைமையாசிரியர் ஒருவர், வகுப்பறையிலேயே மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறார்.

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் வகுப்பறையில் மாணவியிடம் அத்துமீறி பாலியல் விவகாரத்தில் சிக்கி உள்ளார்.

இவர் அந்த பள்ளி மாணவிகளிடம் அத்துமீறி நடந்து வந்துள்ளார். மாணவிகளுக்கு பாலியல் தொல்லையும் தந்து வந்திருக்கிறார்.. ஏகப்பட்ட புகார்கள் இந்த தலைமை ஆசிரியர் மீது எழுந்தாலும், யாரும் அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.

தலைமை ஆசிரியர் மாணவி ஒருவரை தனது ஆசைக்கு இணங்கும்படி ஆசை வார்த்தைகள் சொல்லி உள்ளார்.. மாணவியும் பயந்து, அதற்கு இணங்கி உள்ளார். அவரும் மாணவியை கட்டாயப்படுத்தி நெருக்கமாக இருந்துள்ளார். வகுப்பறையில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டு இருந்துள்ளார்..

அந்த பள்ளி மாணவர்கள் இதை பார்த்துவிட்டு, தங்களது செல்போனில் வீடியோ எடுத்துவிட்டனர்.. அந்த வீடியோவை கல்வித்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சோஷியல் மீடியாவிலும் அதை பதிவேற்றியுள்ளனர். இது பெற்றோர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடையே கடுமையா அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதிகாரிகள் இதுபற்றி விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டனர். அதன்பேரில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரிடமும் விசாரணை வட்டார கல்வித்துறை அதிகாரி தலைமையிலான குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.