மாணவர்களே உடனே உங்கள் அக்கவுண்டை செக் பண்ணுங்க.. தமிழக அரசு அனுப்பிய ரூ 1000!! முதலில் இவர்களுக்கு மட்டும் தான்!!

Photo of author

By Rupa

 

தமிழக அரசாங்கம் பள்ளி மற்றும் உயர் கல்வி படிக்கும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு அதிகப்படியான நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதனையடுத்து பள்ளி படிப்பை முடித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்று கூறியது.

இதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது இதன் தொடர்ச்சியாக மாணவர்களுக்கும் தமிழ்ப்புதல்வன் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உயர் கல்வியில் மாணவர்கள் சேருவதற்கு உதவிகரமாக மாதம்தோறும் ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும். ஆனால் அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. மேற்கொண்டு இத்திட்டத்தின் கீழ் இணைய வங்கி கணக்கு, ஆதார் அட்டை உள்ளிட்டவைகள் பள்ளிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த திட்டத்தின் மூலம் மூன்று லட்சம் மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் இன்று ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். கோவை அரசு கல்லூரியில் தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கி வைப்பதை அடுத்து அனைத்து மாணவர்களின் வங்கி கணக்கிலும் ஆயிரம் செலுத்தப்படும்.