கொரோனா தொற்றின் காரணமாக மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.இதனால் ஏப்ரல்,மே மாதம் நடைப்பெற இருந்த கல்லூரி தேர்வுகளை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது இதனையடுத்து இறுதி பருவத்தேர்வை தவிர்த்து மற்ற அனைத்து பருவத் தேர்வுகளும் இரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதனையடுத்து அண்ணா பல்கலைகழகம் கடந்த மாதம் 23 ஆம் தேதி ஆன்லைன் வழியே இறுதி பருவ மாணவர்களுக்கு தேர்வை நடத்தியது.இந்த தேர்விற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விதிமுறைகள் விதிக்கப்பட்டன மேலும் மாணவர்கள் தேர்வை எவ்வாறு எழுத வேண்டும் என்று பல்வேறு வழிமுறைகளை தேர்விற்கு முன்பாக தெளிவாக வெளியிட்டது.இவற்றை எல்லாம் பல்வேறு செயற்கை தொழில் நுட்பங்களை பயன்படுத்தி கண்கானித்தது.
ஆனால்,இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் தேர்வின் போது சில மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்திய விதிமுறைகளை பின்பற்றாமல் வீட்டில் படுத்துகொண்டும்,டீக்கடையில் உட்கார்ந்து கொண்டும் தேர்வு எழுதியுள்ளனர்.இன்னும் சிலர் இன்னொரு மொபைலில் கேள்விக்கான பதிலை தேடி தேர்வு எழுதியுள்ளதும் தெரியவந்துள்ளது இவற்றை கண்காணித்து கண்டுபிடித்த அண்ணா பல்கலைக்கழகம் தற்போது ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் ஆப்சென்ட் வழங்க முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் இந்த வார இறுதிக்குள் இறுதி பருவத் தேர்வின் முடிவுகள் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் இத்தகைய முடிவு சில மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஏனெனில் தேர்வின் போது சில மாணவர்களுக்கு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுப்பட்டுள்ளது மேலும் இந்த முறையில் தேர்வு எழுதுவது என்பது மாணவர்களுக்கு புதுமையான முறை என்பதால் சில மாணவர்களால் சரியான முறையில் தேர்வை எழுத முடியவில்லை. இவர்களுக்கு மட்டும் தனியாக மறு தேர்வுகள் நடத்தப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் சில மாணவர்கள் செய்த தவறுக்காக, தொழில் நுட்ப கோளாறு காரணமாக தேர்வு எழுத முடியாத மாணவர்களின் மறுதேர்வு வாய்ப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது.எனவே அண்ணா பல்கலைக்கழகம் இந்த விடயத்தில் சரியான முடிவினை எடுக்கவேண்டும் என்று பெற்றோர்களும்,மாணவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.