10 மற்றும் +2 முடித்த மாணவர்களே.. அரசு டிப்ளமோ கல்லூரியில் சேர விண்ணப்பிப்பது எப்படி?

தமிழகத்தில் இந்த மாதத்தில் தொடக்கத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது.இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.தமிழ்நாடு அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான மாணவ சேர்க்கை நடைபெறுகிறது.

நடப்பு கல்வியாண்டு அதாவது 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்பொழுது தொடங்கியிருக்கிறது.கடந்த மே 7 அன்று சேர்க்கை முறை தொடங்கப்பட்ட நிலையில் வருகின்ற மே 31 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது.

தமிழகத்தில் மொத்தம் 55 அரசு பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு கொண்டிருக்கிறது.இது தவிர 32 அரசு உதவிபெறும் பாலிடெக்னி மற்றும் 414 தனியார் பாலிடெக்னி கல்லூரிகள் இயங்கி கொண்டிருக்கிறது.தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மொத்தம் 1 லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் இருக்கின்றது.

இதில் 55 அரசு பாலி டெக்னிக் கல்லூரிகளில் 20,500க்கும் அதிகமாக இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.32 அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 14,000 இடங்களும் இருக்கிறது.10 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் மூன்று ஆண்டுகள் டிப்ளமோ படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.அதேபோல் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் டிப்ளமோ படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.

இந்த பாலிடெக்னிக் கல்லூரியில் சேர சேர்க்கை கட்டணம் ரூ.2000 முதல் ரூ.2500 வரை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் இருப்பவர்கள் http://tnpoly.in/ என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.