2020 ஆம் கல்வியாண்டில் படித்த மாணவர்கள் இந்த தேர்வை எழுத வாய்ப்பில்லையா! தேசிய தேர்வுகள் முகமை அளிக்கும் பதில்!
தமிழக மாணவர்கள் ஐஐடி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு தேசிய தேர்வுகள் முகமை ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தி வருகின்றது.அந்த நுழைவு தேர்விற்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் மாணவர்கள் மத்திய கல்வி நிறுவனங்களில் பல்வேறு விதமான சிக்கல் எழுந்து வருகின்றது.
அதனால் சுமார் 25 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட உள்ளனர்.ஐஐடி,என்ஐடி போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு நுழைவு தேர்வானது வரும் ஜனவரி 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.ஜேஇஇ முதல்நிலைத் தேர்விற்கு டிசம்பர் 15 ஆம் தேதி முதல் ஜனவரி 12 ஆம் தேதி வரை த்ங்ங்ம்ஹண்ய்.ய்ற்ஹ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
ஆனால் அந்த விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை கட்டாயம் உள்ளீடு செய்ய வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.அடுத்த கல்வியாண்டில் சேர்வதற்கு தான் நடப்பாண்டில் பிளஸ் டூ பயின்று வரும் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.குறிப்பாக தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் 2020-2021 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தற்போது பிளஸ் டூ படித்து வரும் மாணவர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டில் தான் பத்தாம் வகுப்பு படித்திருப்பார்கள்.ஆனால் அப்போது கொரோனா காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பெண்கள் வழங்கவில்லை.அனைவரும் தேர்ச்சி என மட்டும் குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.சான்றிதழ்களில் மதிப்பெண்கள் எதுவும் குறிப்பிடபடவில்லை அதனால் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 2020 ஆம் ஆண்டில் இணையவழி தேர்வுகள் நடத்தப்பட்டு கிரேடு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.அதனால் சிபிஎஸ்இ மாணவர்கள் இது குறித்து எந்த ஒரு சிக்கலையும் சந்திக்கவில்லை.மத்திய அரசு நடத்தும் ஜேஇஇ தேர்வுக்கு பாதிப்பு உருவாகி உள்ள நிலையில் அடுத்தடுத்து நடைபெற உள்ள நீட் உள்ளிட்ட தேர்விற்கும் இதுபோன்ற சிக்கல்கள் தோன்றும்.அதனால் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் பள்ளிக் கல்வித் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில் தமிழக பள்ளி கல்வித் துறை சார்பில் தேசிய தேர்வுகள் முகமைக்கு கடிதம் அனுப்பப்படவுள்ளது.அந்த கடிதத்தில் என்டிஏ நடத்தும் போட்டித் தேர்வுகளில் தற்போது பிளஸ் டூ பயிலும் தமிழக மாணவர்களின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.