ராமேஸ்வரம் – இலங்கை இடையே மீண்டும் பயணிகள் படகுப் போக்குவரத்தை தொடங்க ஆய்வு!!

Photo of author

By Savitha

ராமேஸ்வரம் – இலங்கை இடையே மீண்டும் பயணிகள் படகுப் போக்குவரத்தை தொடங்க ஆய்வு!!

ராமேஸ்வரம் மற்றும் இலங்கை தலைமன்னாருக்கு இடையே கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி பயணிகள் படகு போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான வழிகள் ஆராயப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,1076 கிலோ மீட்டர் நீள கடலோரத்தில் குறுகிய தூர பயணிகள் படகு போக்குவது மற்றும் கடல் நீர் விளையாட்டுகளை தொடங்குவதற்கான வழிமுறைகளை ஆராய , சாதகமான இடங்களை கண்டறிய தொழில்நுட்ப சாத்தியகூறு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.