ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பு படிக்கலாம்! இதோ வெளிவந்த விதிமுறை!

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்பு படிக்கலாம்! இதோ வெளிவந்த விதிமுறை!

இனி மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் படிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் ஜெகதீஷ் குமார் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஆனால் அதற்கான விதிமுறைகளை வெளியிடவில்லை. தற்போது இந்த முறையில் எவ்வாறு படிக்க வேண்டும் என்று அதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளனர். ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் படிப்பது என்பது சாதாரண காரியமல்ல. அதனால் முதலில் ஒரு பட்டப்படிப்பை பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக சென்று படிக்க வேண்டும்.

அதன் இரண்டாவதாக படிக்கப்போகும் பட்டப்படிப்பை தொலைதூரக்கல்வி வாயிலாகவோ அல்லது ஆன்லைன் முறையிலும் படிக்கலாம். மாறாக இரண்டு பட்டப்படிப்பின் கல்வி நேரம் வேறாக இருந்தால் நேரடியாக பல்கலைக்கழகத்திற்குச் சென்று படிக்கலாம் என்று கூறியுள்ளனர். ஆனால் இரண்டு பட்டப்படிப்பையும் ஆன்லைன் முறையில் படிக்க இயலாது. அதேபோல யூஜிசி அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் மட்டுமே இந்தப் பட்டப் படிப்புகளைப் படிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். இது இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் மட்டுமே படிக்க இயலும் என்று தெரிவித்துள்ளனர். இதன் வாயிலாக பிஎச்டி படிப்புகள் படிக்க இயலாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Leave a Comment