பெண் தொழிலாளர்களுக்கு மானியம்!! தமிழக அரசு நிதியுதவி!

Photo of author

By Vijay

பெண் தொழிலாளர்களுக்கு மானியம்!! தமிழக அரசு நிதியுதவி!

Vijay

Subsidy for women workers!! Tamil Nadu government funding!

பெண் தொழிலாளர்களுக்கு மானியம்!! தமிழக அரசு நிதியுதவி!

தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுசெய்த பெண் வாகன ஓட்டுநர்களுக்கு புதிதாக பயணிகள் ஆட்டோ வாங்கத் தேவையான ஒரு இலட்சம் மானியத்துடன் நிதியுதவி அளிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நல வாரியத்தில் பதிவு செய்த பெண் உறுப்பினர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்து உரிய பலன்களை பெறலாம்.  இதுப் பற்றிய செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ள செய்தியாவது, பெரம்பலூர் மாவட்டத்தில் ஓட்டுநர் பணியில் ஈடுபட்டுள்ள பெண் ஓட்டுனர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஓட்டுநர் மற்றும் தானியங்கி வாகன தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள வாகன ஓட்டுநர் தொழிலில் ஈடுபடும் பெண் வாகன ஓட்டுனர்களுக்கு ஒரு இலட்சம் மானியத்துடன் நிதியுதவி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் தொழிலாளர் நல வாரியத்தில் இதுவரை பதிவு செய்யாத ஓட்டுனர்கள் பதிவு செய்து திருமணம்,மகப்பேறு,கண்கண்ணாடி, ஒய்வூதியம், குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை ,திருமண உதவி, இயற்கை மரணம், விபத்து மரணம்,போன்ற நலத்திட்ட உதவிகளை பெற்று பயன் பெறுமாறு தொழிலாளர் உதவி ஆணையம்                 (சமூக பாதுகாப்பு திட்டம்) கூறியுள்ள அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள பெண் உறுப்பினர்கள் https://tnuwwb.tn.gov.in  என்ற இணையதளத்தின் வழியே விண்ணப்பித்து மானியத்துடன் கூடிய நிதி உதவி பெற்று பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.