அதிவேக விமானம் சோதனையின் வெற்றி : டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு!
இந்தியா ஹைப்பர்சோனிக் என்ற அதிவேக விமானம் சோதனையில் வெற்றி பெற்றதற்காக டிஆர்டிஓ விஞ்ஞானிகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஒடிசா கலாம் தீவில் நடத்தட்பட்ட ஹைபர்சோனிக் அதிவேக விமான சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஸ்க்ராம்ஜெட் உந்துவிசை முறையை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஹைபர்சோனிக் டெக்னாலஜி டெமோன்ட்ரேட்டர் ட வாகனத்தை டிஆர்டிஓ இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது.இந்த வெற்றியின் மூலம் அனைத்து முக்கியமான தொழில்நுட்பங்களும் அடுத்த கட்டத்தில் முன்னேறி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளார்.
சுயசார்பு பாரதத்தின் பிரதமரின் பார்வை உணர்ந்து கொள்வதற்கான ஒரு மைல்கல் சாதனையை தற்பொழுது டிஆர்டிஓ விஞ்ஞானிகள் நடத்தியுள்ளதாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
இந்த திட்டத்துடன் தொடர்புடைய விஞ்ஞானிகளுடன் பேசிய அமைச்சர் ,இது பெரிய சாதனைகளுக்கு பிரதமர் வாழ்த்தியதாக ராஜ்நாத் சிங் கூறினார். இந்தியா அவரால் பெருமை கொள்கிறது என பாராட்டுகளை தெரிவித்தார் அமைக்சர் ராஜ்நாத் சிங் . HSTDV என்பது 20 நொடிகளில் 32.5 கிலோ மீட்டர் உயரத்தில் ஹைபர்சோனிக் வேகத்தை கடக்கூடிய ஆளில்லா விமானம் ஆகும். இதை வெற்றிகரமாக சோதித்து பார்த்து அதன் மூலம் உலகில் இந்த வசதி உள்ள சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெறும் என்ற அவர் கூறினார். ராணுவ பயன்பாடு மட்டுமின்றி குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை செய்ததிலும் இது உதவும் என அவர் தெரிவித்தார்.